582
காவல்துறை பற்றி
யிருந்தால் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன அந்தத் தொகைக்கு வாங்கி இருக்க முடியும். இவற்றோடு சேர்ந்து Printer, Modem, Net Work-தொடர்பு, பெரிய Computer Server-கள் UPS ஆகியவற்றையும் வாங்கியிருக்கின்ற காரணத்தால் இந்தத் தொகை அளிக்க வேண்டியதாயிற்று என்ற என்னுடைய விளக்கத்தைத் தர விரும்புகின்றேன்.
காவல் துறைக்கு அரசின் சார்பில் அளிக்கப்பட்டிருக்கின்ற மொத்த நிதியொதுக்கீடு எவ்வளவு என்று பார்த்தால் 1995-96-இல், கடந்த ஆட்சியில், 450 கோடியே 57 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1996-97-இல் அது 497 கோடியாக உயர்ந்து இப்போது 2000-2001 வரவு-செலவுத் திட்டத்தில் காவல் துறைக்கு மொத்த நிதியொதுக்கீடு 1116 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி). அதாவது 4 ஆண்டுகளில் காவல் துறைக்கு அதிகமாக்கப்பட்ட நிதியொதுக்கீடு 663 கோடி ரூபாய் ஆகும்.
4
என்னுடைய அருமை நண்பர் திரு. பழனிசாமி அவர்களும் மற்றும் பல உறுப்பினர்களும், ஆளுங்கட்சி சார்பிலே பேசியவர்களும், எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தவர்களும், காவல் துறையினுடைய தவறான போக்குகள், தவறான காரியங்கள் இவற்றை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நம்முடைய நண்பர் பழனிசாமி அவர்கள் காவல் துறையினுடைய சிறந்த செயல்களுக் கான பாராட்டுகளையும் இங்கே தெரிவித்திருக்கின்றார். ஆகவே, இந்த் துறை முழுவதும் கண்டிக்கத்தக்க ஒன்று அல்ல என்பதும் அதிலே ஒரு சிலருடைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்க அளவிற்கு இருக்கின்றன என்பதும் புலனாகின்ற உண்மையாகும்.
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றியும் மத நல்லிணக்கத்தைப் பற்றியும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். பிறகு நான் என்னுடைய பேச்சின் இடையிலே மறந்துவிடக்கூடும். அமீர் அவர்களுடைய பெயரால் மத நல்லிணக்கப் பதக்கம் ஒன்று வழங்க வேண்டும் என்று இங்கே சுட்டிக்காட்டினார்கள். நிச்சயமாக அந்தப் பெருமகனுடைய பெயரால் அந்தப் பதக்கம் வழங்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).