பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

585

வழிப்பறி - (Robbery) - உத்தரப் பிரதேசத்தில் 2,295; பீகாரில் 1,430; ஒரிசாவில் 557; கர்நாடகாவில் 551; ஆந்திரப் பிரதேசத்தில் 403; தமிழ்நாட்டில் 297; கன்னக்களவு (Burglary) - மத்தியப் பிரதேசத்தில் 8,962; மராட்டியத்தில் 7,339; உத்தரப் பிரதேசத்தில் 4,739; கர்நாடகாவில் 3,940; ஆந்திரப் பிரதேசத்தில் 3,396; தமிழ்நாட்டில் 2,745.

கலவரங்கள் (Riots) - இராஜஸ்தானில் 7,861; பீகாரில் 5,540; கர்நாடகாவில் 3,722; உத்தரப் பிரதேசத்தில் 3,494; கேரளாவில் 3,199; மேற்கு வங்காளத்தில் 2,258; தமிழ்நாட்டில் 1,939 என்ற அளவில் இந்த விகிதாச்சாரங்கள், குற்ற நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

காவல் துறையினுடைய சிறப்பான பணி என்று எடுத்துக் காண்டால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், காவல் துறையினுடைய எண்ணிக்கை ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு பேர், மற்ற மாநிலங்களிலே எவ்வளவு பேர் என்ற கணக்கைப் பார்க்கின்றபொழுது, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு, பஞ்சாபில் 297 காவலர்கள்; மராட்டியத்தில் 155 காவலர்கள்; குஜராத்தில் 138 காவலர்கள் என்ற விகிதத்திலே இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலேதான் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு நூற்றி இருபத்து நான்கே பேர்கள்தான் காவலர்கள் என்ற விகிதத்திலே, குறைவான எண்ணிக்கையில் உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்பொழுது, காவலர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, செயல்பாடுகள் மற்ற மாநிலங்களை மிஞ்சக்கூடிய அளவில் இருக்கின்றன.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினுடைய சதவீதம் என்று பார்த்தால், அகில இந்திய சராசரி, 1997-ல் 77 சதவீதம். தமிழ்நாட்டில் 91 சதவீதம். 1998ஆம் ஆண்டு அகில இந்திய சராசரி 77 சதவீதம். தமிழ்நாட்டில் 90 சதவீதம்.

அதேபோல தொடரப்பட்ட வழக்குகளில், தண்டனையில் முடிவுற்ற வழக்குகளினுடைய சதவீதம் அகில இந்திய சராசரி 1997-ல் 38 சதவீதம். தமிழ்நாட்டில் 64 சதவீதம். 1998-ல் அகில இந்திய சராசரி 37 சதவீதம், தமிழ்நாட்டில் 64 சதவீதம். அதிலும் நாம் சிறப்பாகப் பணியாற்றினோம் என்பதைத்தான் அந்தப் புள்ளிவிவரம் நமக்கு இங்கே காட்டுகின்றது.