590
காவல்துறை பற்றி
பொள்ளாச்சியில் ஜிகாத் Committee தலைவர் திரு. பழனிபாபா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-11-1999 அன்று ஐந்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 5 வருடக் கடுங்காவல் தண்டனையும் அளிக்கப்பட்டது.
சிதம்பரம் ம.தி.மு.க. பிரமுகர் பழனிவேலு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 17 குற்றவாளிகள், கைதாகாமல் இருக்க எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளையும் முறியடித்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளார்கள்.
தேவகோட்டை தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ரூசோ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்து, சொர்ணலிங்கம் மற்றும் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
மதுரை கல்லூரிப் பேராசிரியர் பரமசிவம் கொலை செய்யப் பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இப்ராஹிம், நூர்தீன், ஷாகுல் ஹமீது, இப்ராஹிம் ஷா மற்றும் பழனி ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீதும், நீதிமன்றத்தில் சரண் அடைந்த பக்ருதின் என்பவர்மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் இவர்களில் 4 குற்றவாளிகள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
மதுரையில் உதவி ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபுதாகிர், ஆசிக், அஸ்லாம் மற்றும் ஜாப்ரு என்ற சையது ஜபார் அகமது ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், களத்தூரைச் சேர்ந்த மந்திரவாதி வேலுசாமி தனது தாயார், மாமனார் மற்றும் தனது உதவியாளர் ஆகிய மூன்று பேரைக் கொன்ற வழக்கில், புலன் விசாரணை C.B. - C.I.D.-க்கு மாற்றப்பட்டுள்ளது. வேலுசாமி உள்ளிட்ட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 25-2-2000 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.