பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

593

மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திருமதி லீலாவதி கொலை வழக்கில் ஆளுங்கட்சிக் காரர்கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது, என்றாலும் அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அதுமாத்திரமல்ல, வழக்கு முடியும்வரை அவர்கள் ஜாமீனில்கூட வரமுடியாமல், குற்றவாளிகள் ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

கோவையில் பச்சிலை ராமன் என்பவர் ஜக்கம்மா பூஜை என்ற பெயரில் சுமார் 20 அப்பாவிப் பெண்களைக் கடத்திச் சென்று உடலுறவு வைத்து பின்னர் திருப்பி அனுப்பியிருக்கிறார். 8-2-2000 அன்று இவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு தடுப்புக் காவல் சட்டத்திலே வைக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் சாமியாடி வாக்கு சொல்லுவதாகக் கூறி பல நாட்களாக ஏமாற்றி வந்திருக்கிறார். இறுதியாக வள்ளி அம்மாள் என்பவரைக் கற்பழித்ததாகப் புகார் வந்ததையொட்டி வழக்குப் பதிவு செய்யப் பட்டு இவரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வளவு ஏன், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. சோ. பாலகிருஷ்ணன் அவர்களுடைய மகனுடைய இல்லத்திலேகூட 12ஆம் தேதி திருட்டு, 13ஆம் தேதி கண்டுப் பிடிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. சோ. பாலகிருஷ்ணன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே என்னுடைய மகன் வீட்டில் திருடியதை 24 மணி நேரத்தில் பிடித்துவிட்டார்கள். அதனால் எனக்கு என்ன தொல்லை என்றால், திருட்டுக்கு உள்ளானவர்கள் எல்லாம் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் வந்துவிட்டது, அதேபோல் எங்களுக்கும் வாங்கிக் கொடுங்கள் என்று ஏகப்பட்ட phone calls வருகிறது. (சிரிப்பு).

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : எப்படியோ செய்தி, விளம்பரமானால் சரி. (சிரிப்பு).

20 - க.ச.உ. (கா.து)