594
காவல்துறை பற்றி
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், பலமாடிக் குடியிருப்புகளில் திருடுவதில் கைதேர்ந்த கவுஸ் பாஷா, அவருடைய மகன் அக்பர் பாஷா மற்றும் மருமகன் நாசர் ஆகியோர் சென்னை நகரக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். 18 வழக்குகளில் தொடர்புள்ள இவர்களிடம் இருந்து ரூ. 5.2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. இவர்கள் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலே அடைக்கப்பட்டார்கள்.
தாம்பரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த, 1990 முதல் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டு வந்து 105 வழக்குகளில் குற்றவாளியான இரத்தின பாண்டியன் என்பவர் 13-9-1999 அன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 87 தொலைக்காட்சிப் பெட்டிகள், 131 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. 4-11-1999 அன்று இவர் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைக்கப்
பட்டார்.
தென் சென்னைப் பகுதிகளில் திருட்டுகள் புரிந்து வந்த கல்கத்தாவைச் சேர்ந்த கொடூரமான குற்றவாளி பர்வீஸ் அலி என்பவர் 2-7-1999 அன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 3 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. இக் குற்றவாளி, குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டார்.
சென்னை பூக்கடைப் பகுதிகளிலே உள்ள வியாபாரிகளிட மிருந்து பெரிய அளவில் பணத்தைக் கொள்ளை அடித்து, 10 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் சுமார் 25 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொளளயடித்த குற்றவாளிகளான மன்னீர் பேட்டையைச் சார்ந்த அனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 20-7-1999 அன்று கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பல்வேறு கொள்ளைகள் மற்றும் பணத்திற்காக ஆட்களைக் கடத்துதல் போன்ற குற்றங்களைச் செய்து வந்த முகேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அனைவரும் 29-12-1999 அன்று கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து மூன்று