596
காவல்துறை பற்றி
ஏற்கெனவே 17 முறை சிறைத் தண்டனை அனுபவித்து 32 கொள்ளைகள், கொலை மற்றும் வன்முறை போன்ற குற்றங்களில் சம்பந்தப்பட்ட சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த தங்கையன் என்பவரும் அவனது 8 கூட்டாளிகளும் 14-12-1999 அன்ற கைது செய்யப்பட்டார்கள். குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சென்னை வால்டாக்ஸ் சாலையைச் சார்ந்த தங்கவேல் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர் ஆகியோர் 7-2-1999 அன்று கோவி என்பவரைக் கொலை செய்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு 22-2-1999 அன்று குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பல்வேறு கொள்ளை, பணத்திற்காக ஆட்களை கடத்துதல் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற குற்றங்களைச் செய்து வந்த சுப்பிரமணி என்ற குற்றவாளி 27-6-1999 அன்று குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்ட்டார்.
கட்டப் பஞ்சாயத்து செய்தல், ஆட்களைக் கடத்துதல் மற்றும் ஆட்களை மிரட்டி குடும்பத்தினைரை வீடு காலி பண்ணச் செய்து வந்த இராஜா என்பவனும் அவனது கூட்டாளிகள் 12 பேர்களும் 10-4-1999 அன்று கைது செய்யப்பட்டு குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ரவுடி கும்பலைச் சேர்ந்த லிங்கம், பாபு சுரேஷ் ஆகியோரைக் கொலை செய்த ரவுடி சீலன் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
ரவுடிகள் மீண்டும் தொடர்ந்து தலையெடுக்காமல் இருக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதற்குப் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு நிரம்பத் தேவை என்பதை இந்த மாமன்றத்தின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்.