5
நடைபெற்ற அந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில், நான், பேராசிரியர் க. அன்பழகனார், ஏ. வி.பி. ஆசைத்தம்பி, திருமதி சத்தியவாணிமுத்து, ஏ. கோவிந்தசாமி, ப. உ. சண்முகம், விருதாசலம் எம். செல்வராஜ், எம். பி சுப்பிரமணியம், ம. பா. சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன், பி. எஸ். சந்தானம், சி. நடராஜன் ஆகிய நாங்கள் 15 பேர் வெற்றிபெற்று, சட்டப்பேரவையில் இடம்பெற்றோம்.
ம்
அன்று முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் எனக்கு; ஆம் கழகத்துக்கு; நான் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றியைத் தான் அளித்தார்கள்.
நான்
இந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் சட்டப்பேரவையில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆற்றிய உரைகளை அவற்றின் அகல நீளம் கணக்கிடாமல் அப்படியே அச்சியற்றித் தருகிற அரிய பணிக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட தம்பி சண்முகநாதனை என்னால் மறக்கவே முடியாது. அவரது முயற்சிதான்