கலைஞரின் சட்டமன்ற உரைகள்
601
சில குழுக்கள் அன்றைக்கு வந்தன. 'TELO' போன்ற குழுக்கள் எல்லாம் அன்றைக்கு எங்கள் பக்கம் வந்து எங்களுடைய ஆதரவைக் கோரினார்கள். E.P.R.L.F. என்ற ஒரு group இருந்தது. அவர்கள் சில கட்சிகளுடைய தயவை நாடினார்கள். இப்படி நான்கு ஐந்து groups இருந்தபோது, குழுக்கள் இருந்த அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எல்லோரையும் சமமாக நினைத்துத்தான் உதவினோம். என்னடைய பிறந்தநாள் ஒன்றிற்கு உண்டியலிலே போடப்பட்ட பணத்தை எல்லாக் குழுவினருக்கும் பகிர்ந்தளிப்பதாக அறிவித்து, அப்படி அந்த அறிக்கையை நான் வெளியிட்டபோது, மூன்று, நான்கு குழுக்கள் வந்து வாங்கிக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் மாத்திரம் வந்து வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்கள். நான் கொடுப்பதை வாங்கிக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்கள். காரணம் அங்கேயே group-ஆக இருந்துதான் வந்தார்கள். இங்கே வந்தாலும் இங்கே வேறு group இவர்களுக்கு. அதனால் வாங்கினால் யாரோ கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக வாங்காமல் இருந்து விட்டார்கள். அது நாடறிந்த இரகசியம். பிறகு அந்தப் பணத்தை மறுபடியும் பிரித்து மிச்சம் இருக்கிற குழுக்களுக்கே கொடுத்து விட்டேன். விடுதலைப் புலிகள் வாங்க மறுத்துவிட்டார்கள். அந்த அளவுதான் எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள தொடர்பு என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
பத்மநாபா கொலையைப்பற்றி நம்முடைய டாக்டர் செல்லக்குமார் அவர்கள்கூடப் பேசினார்கள். பத்மநாபா கொலை நடந்தது 19-6-1990. அதற்குப்பிறகு 4 மாதங்கள் கழித்து 4-10-1990-லே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளுக்கு ஒரு தனிப் பேட்டி கொடுக்கிறார்கள். அந்தப் பேட்டியில் என்ன சொல்லியிருக் கிறார்கள் தெரியுமா? 'பத்மநாபா கொலைக்குப் பிறகு புகார் கூறுகிற அளவுக்கு விடுதலைப் புலிகள் எந்தக் காரியத்திலும் ஈடுபட வில்லை' என்று ஒரு Certificate கொடுக்கிறார்கள். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே 4-10-1990 அன்று வந்த அவருடைய பேட்டி, ஜெயலலிதா அவர்களுடைய பேட்டி.