பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




602

காவல்துறை பற்றி

“சிங்கள இராணுவமும், காவல் துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள இராணுவத்தை எதிர்த்து தீரத்தோடு போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஒரு அதி தீரமான செயல். .

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப் புலிகளினுடைய வெற்றி, இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அனைத்து சக்தியும் மற்றும் கவனம் முழுவதும் முதலமைச்சருடைய நாற்காலியைப் பாதுகாத்துக்கொள்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றது” என்று என்மீது குற்றஞ்சாட்டி விடுதலைப் புலிகளுக்கு நான் உதவவில்லை என்பதை பத்திரிகையிலே தனிப் பேட்டியாகக் கொடுத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதுமாத்திரமல்ல. . . .(குறுக்கீடு).

திரு. பி.ஆர். சுந்தரம் : விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்ட விஷயத்தில் இராஜிவ் காந்தி இங்கே தமிழகத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பிறகு உள்ள நிகழ்ச்சி ஒன்று. இராஜிவ் காந்தி நிகழ்ச்சிக்கு முன்பு அவர்களுடைய நிலைமை வேறு. அதை விடுதலைப் புலிகள். . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதை யாரும் மறுக்கவில்லை. முதலமைச்சர் அவர்கள் தேதியைச் சொல்லும் போதே அது தெளிவாகத் தெரிகிறது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் அதை மறுக்கவில்லை. ஆனால் பத்மநாபா