பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




604

காவல்துறை பற்றி

கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 4 wire- less கருவிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் சொல்ல விரும்புகின்றேன். 1996 மே மாதத்திற்குப் பிறகு L.T.T.E. சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஒன்றுகூட நடைபெற வில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1991-96 ஆகிய 5 ஆண்டுக் காலத்திலே பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்தப் பழைய கதைக்கெல்லாம் நான் மீண்டும் செல்ல விரும்பவில்லை.

‘பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப் போல இராணுவ நடவடிக்கைப்பற்றி இந்தியா சிந்தித்தால் அதில் தவறு எதுவும் இல்லை என்று கருதுகிறேன்'

என்றுகூட சொன்னவர்தான் ஜெயலலிதா; இந்து பத்திரிகையிலே 29-4-1991 அன்று வந்தது. பிறகு அவரது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். நான் அதை வரவேற்கிறேன். ஆனால் இப்படி ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, அந்தக் கருத்திலேயே கடைசிவரையிலே இருக்கிறார்கள் என்று யாரும் அதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட முடியாது. . . (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் சொல்ல வருவதைத்தான் அவரே சொல்லுகிறார். நீங்கள் ஊடே எழுந்திருக்க வேண்டாம். நான் உங்களுக்கு அனுமதி கொடுக்க வில்லை. முதலமைச்சர் தன்னுடைய நிலையை தெளிவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். (குறுக்கீடு). நீங்கள் பேசுவது அவைக் குறிப்பில் ஏறாது. நீங்கள் முதலில் உட்காருங்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : முதலில் அவர் தமிழைக் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் நான் பேசுகின்ற தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழைக் கற்றுக் கொள்ளாமல் பேசக்கூடாது. (மேசையைத் தட்டும் ஒலி). 'தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறேன்' என்று நான் சொல்லவில்லை. 'தமிழ் ஈழம் பெறுவார்களேயானால் மகிழ்ச்சியடைவேன்' என்று சொன்னேன். அதற்கும், இதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது. எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் தமிழ்; தமிழில் அதுதான் பெரிய கோளாறு.