60
காவல்துறை பற்றி
உரை : 4
நாள் : 15.03.1969
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்த மாமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ள காவல்துறை மானியத்தின் மீது பல்வேறு கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர்களும் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் தங்களுடைய கருத்துக்களை யெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர வர்கள் எனக்கு, அவராகவே வலிய வந்து ஒரு பட்டத்தையும் இன்றையத்தினம் சூட்டியதற்கு நான் கைம்மாறாக எதாவது தர வேண்டும். அவர் என்னை ‘கற்பனை ஜோதி' என்றார், ஆனால் இந்த மாமன்றத்தில், புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்டதற்குப் பிறகு. அவர் பேசுகின்ற பேச்சுக்களிலெல்லாம் வெடிக்கின்ற ஹாஸ்ய வெடிகளைப் பார்க்கின்ற நேரத்தில் அதற்குக் கைமாறாக, 'ஹாஸ்ய ஜோதி கருத்திருமன்' என்கின்ற பட்டத்தை (குறுக்கீடு) ஆசிய ஜோதி அல்ல, 'ஹாஸ்ய ஜோதி' என்கின்ற பட்டத்தை. .
திரு. கே. வினாயகம் : ஹாஸ்யம் என்பது வடமொழியாயிற்றே.
மாண்புமிகு கலைஞர். மு. கருணாநிதி : உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் அந்த மொழியிலே வைத்தேன்.
இந்த மானியத்தைப் பொறுத்தவரையிலும், எதிர்க் கட்சியிலே நாங்கள் இருந்தபொழுது போலீஸ் துறையினுடைய எல்லா வகையான கொள்கைகளையும் எடுத்து விமர்சித்திருக் கிறோம். அந்த நேரத்திலும் அடக்குமுறைகளைபற்றி எங்கள் கருத்துக்களையெல்லாம் அறிவித்திருக்கிறோம். ஆனால் எதிர்க் கட்சியின் தலைமைப் பொறுப்பிலேயிருந்த நாங்கள் அவ்வளவும் பேசிவிட்டு இறுதியாகவாவது அல்லது பேச்சிலே ஒரு பகுதியா கவாவது, கஷ்டப்படுகின்ற காவல் துறையினருக்கு இன்னின்ன சலுகைகளை வழங்க வேண்டுமென்பதை அந்த மானியத்திலே