610
காவல்துறை பற்றி
கொடுத்தது உண்மை. ஆனால் அதற்குத் திறப்பு விழா நடக்கவில்லை. நடந்தால்தானே கூப்பிட முடியும்? நடக்கவில்லை. (குறுக்கீடு). எல்லாவற்றுக்கும் இப்படி எழுந்து நின்றால் எப்படி?
டாக்டர் அ. செல்லக்குமார் : தவறாகச் சொல்லவில்லை; பத்திரிகையிலே செய்தி வந்திருக்கிறது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் சொல்கிறேன். எனக்கு வந்த தகவலை நான் சொல்கிறேன். (குறுக்கீடு) எனக்கு வந்த தகவல். . . (குறுக்கீடு). நான் தகவலைச் சொல்வதற்கு முன்னால் சொன்னால் எப்படி? நான் அதிகமாக இடம் கொடுத்து உட்காகிறேன் என்பதற்காக சும்மா சும்மா எழுந்திருப்பதா? நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்பதற்காக உட்காருகிறேன்; அவ்வளவுதான். (சிரிப்பு). ஏற்கெனவே, கோடம்பாக்கத்திலே ஒரு காவல் நிலையம் இருக்கிறது. அந்தக் காவல் நிலையத்திலே, நான் செல்லக்குமாருக்குக் கொடுத்த அந்த வடபழனி காவல் நிலையத்தையும் அங்கே வைத்து, இரண்டு பேரையும் வைத்து, ஒண்டிக் குடித்தனம் நடத்தினார்கள். அதற்குப் பிறகு, அந்தக் கோடம்பாக்கம் காவல் நிலையத்தை அங்கேயிருந்து அகற்றிவிட்டார்கள். 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியது மாதிரி'. (சிரிப்பு) உங்கள் பிடாரி - வடபழனி காவல் நிலையம் அங்கே இருக்கிற கோடம்பாக்கம் காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தியது. அந்தக் கோடம்பாக்கம் காவல் நிலையம் வேறு இடத்திற்குப் போன பிறகு, பழைய கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு திறப்பு விழா. திறப்பு விழா என்றால், Invitation கிடையாது. யாருக்கும் அழைப்பு என்று எதுவும் கிடையாது. சும்மா அதிகாரிகள் போய் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள் பழைய காவல் நிலையத்திற்கு. புதிய காவல் நிலையத்திற்கு அதுகூட நடக்கவில்லை. அதனால்தான் செல்லக்குமார் அழைக்கப்படவில்லை. நான் செல்லக்குமார் போன்றவர்களெல்லாம் அழைக்கப்படவில்லை என்பதற்காக வருத்தப்படுவேனே தவிர, அதற்காக மகிழ்ச்சியடையக் கூடியவன் அல்ல என்பதையும் அவர் உணர வேண்டும்.
-
உதவி ஆய்வாளர் சம்பத்துக்குப் பதவி உயர்வு கொடுக்கப் படவில்லை என்று சொன்னார். அவர் செய்தது வெடிகுண்டு