பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

611

இருக்கிற இடத்தைப் போய் கண்டுபிடித்தார் என்பது. அதோடு அந்த வெடிகுண்டு வெடிக்குமா, வெடிக்காதா என்று பார்த்தார் என்கிற ஒரே தீரச் செயல்தான். வேறு ஒன்றும் இல்லை. ஆனால் சந்திரசேகரனுக்கு கோயம்புத்தூர் நிகழ்வில் கொடுத்தோம் என்றால் அவர், துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையிலே புகுந்து, வீரசாகசம் புரிந்து, அங்கே சமாளித்தார் என்பதற்காகத்தான் அவருக்கு பதக்கம் எல்லாம் கொடுத்தோம்; பதவி உயர்வு கொடுத்தோம். இவர் அப்படி அல்ல. இருந்தாலும்கூட சம்பத் அவர்களைப் பாராட்டி, 1,500 ரூபாயும், ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவினருக்கு 18 ஆயிரம் ரூபாயும் வெகுமதி வழங்கப்பட்டது. இவருக்கு குடியரசு தலைவர் விழாவில் விருது அல்லது பதக்கம் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து நமது திரு. ஜி.கே. மணி அவர்கள், வன்னியர் சங்கம் வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகவில்லை கவில்லை என்று சொன்னார். சில வழக்குகள் G.O.-விற்குப் பிறகு அல்லது நீதிமன்றத்திலே சில தேக்கத்தின் காரணமாக வாபஸ் ஆகாமல் இருக்கலாம். அவை தவிர, வாபஸ் செய்ய வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் பொதுவான உத்தரவு போட்டாகிவிட்டது. 722 வழக்குகள் 1986 முதல் 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 722 வழக்குகள் அந்தச் சங்கத்தின் மீது இருந்தன அந்த ஆட்சியில். அவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்தது 409. எல்லாவற்றையும் சேர்த்து மூன்றே மாதங்களில், அரசு ஆணை எண் 854, பொதுத்துறை, தேதி 1-8-1996-இன்படி, திரும்பப்பெற ஆணையிடப்பட்டுவிட்டது. 137 வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்திற்கே செல்லாமல் கைவிடப்பட்டன. 104 வழக்குகள் அரசிடம் கோரிக்கை வைக்கப்படுவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தாலும், காவல் துறையினராலும், முடிக்கப்பட்டுவிட்டன. எனவே ஏதாவது மிச்சம் மீதி இருந்தால், அதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினால், அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. இரா. தாமரைக்கனி : எங்களுடைய பகுதியிலே, ஜாதிக் கலவரம்..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தாமரைக்கனி, கையை, கையைக் காண்பித்தால் என்ன அர்த்தம்?