பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




612

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அவையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன.

சென்னையில் ஊர்வலம் நடத்த அனுமதியில்லையென்று பழனிசாமி அவர்களும் சொன்னார்கள்; ஹேமச்சந்திரன் அவர்களும் அன்றைக்குப் பேசினார்கள். சென்னை மாநகரத்திலே போக்குவரத்து நெருக்கடி காரணமாக, சில வரைமுறைகளைக் காவல் துறையினர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருந்தாலும்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1999ஆம் ஆண்டு அனுமதி கோரிய நிகழ்வுகள் 75. அந்த 75-லே 56 நிகழ்வுகளுக்கு, அவர்கள் கோரிய இடத்திலேயே அனுமதி தரப்பட்டிருக்கிறது. 19 நேர்வுகளிலேதான் அனுமதி தரப்பட வில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் 30-4-2000 வரை, அதே கட்சியினர் 33 முறை அனுமதி கோரினார்கள். 28 நிகழ்வுகளில் அவர்கள் கோரிய இடம் தரப்பட்டிருக்கிறது. 5 நிகழ்வுகளிலே மாத்திரம்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்குவத குறித்து நம்முடைய காவல் துறையினருக்குச் சொல்லியிருக் கிறேன். அனுமதி கேட்கும்போது, இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு அல்லது மூன்று இடங்களைக் குறிப்பிட்டு, இந்த மூன்றில் எந்த இடத்தை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அவர்களுக்கு எழுதுங்கள்; அந்த மூன்றில் ஒன்றையோ, இரண்டில் ஒன்றையோ எடுத்க்கொள்ளட்டும் என்று நான் காவல் துறையினருக்குச் சொல்லி இருக்கிறேன். எனவே அந்தப் பிரச்சினை இனி எழாது.

நம்முடைய சுப்பராயன் அவர்கள் மோகனாம்பாள் கொலையைப்பற்றியும் அஞ்சலை கொலையைப்பற்றியும் பேசினார்கள். ஏதோ ஒரு பழைய காலத்து நாவலுக்கு தலைப்பு மாதிரி பேசினார்கள். அவர்களுக்கு எழுதி அனுப்பப்பட்ட அந்த முறையீட்டைப் படித்தால் உருக்கமாக இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. எப்பொழுதுமே அந்த முறையீடுகளையும், மனுக்களையும் படித்துவிட்டு, அதை முழுவதும் நாம் உண்மை என்று நம்பிவிட முடியாது. ஆனால் உண்மை அல்ல என்றும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அதையும் நான் சுப்பராயன் அவர்களுக்குச் சொல்கிறேன். ஆனால் முருகேசன் வழக்கைப் பொறுத்தவரையில், அது குற்றப் பத்திரிகையாகவே தாக்கல்