பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




618

காவல்துறை பற்றி

மதுவிலக்கு அயத் தீர்வைத் துறையின் அனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்படும். இதனால் ஆயத் தீர்வைத் துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மேம்படும்.

கணினி மூலம் தகவல் பெற்று சாராவி, இரசாயனப் பொருட்கள் ஆகியவை வேறு காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரமாக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் காவலர் குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டு வந்தன. 1996-ல் ஆண்டு ஒன்றுக்கு 1,500 காவலர் குடியிருப்புகளாகவும், 1997ஆம் ஆண்டு 2,500 காவலர் குடியிருப்புகளாகவும் உயர்த்தப்பட்டு அவ்வாறு கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 90 கோடி செலவாகும். இந்த ஆண்டு முதல் காவலர் குடியிருப்புகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு 3,000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் காவல் துறைக்கு 624 புதிய வாகனங்கள் 19 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டன. வரும் ஆண்டிற்கு மாத்திரம் 18 கோடியே 72 லடசம் ரூபாய் செலவில் 434 புதிய வாகனங்கள் காவல் துறைக்காக வாங்கப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் தொலைத் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் 628 பணியாளர்களுக்கு இதுவரை சீருடை வழங்கப்படவில்லை. இந்த 628 பேருக்கும் இந்த ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.

உணவுப்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர காலப் பணிகளில் காவலர்களை ஈடுபடுத்தும்போதும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் மற்ற இடங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்பும் சமயத்திலும் அவர்களுக்கு உணவுப்படி வழங்கப் படுகிறது. இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, 1997-ல் ரூ. 16 என்பது ரூ. 25 ஆகவும், 1998-ல் ரூ. 25 என்பது ரூ. 35 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 35 என்பது ரூ. 45-ஆக உயர்த்தப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி). முதல்நிலைக்