கலைஞரின் சட்டமன்ற உரைகள்
619
காலவர்கள் மற்றும் தலைமைக் காவலர்களுக்கு, 1997-ல் ரூ. 20 என்பது ரூ. 30 ஆகவும், 1998-ல் ரூ. 30 என்பது ரூ. 40 ஆகவும், உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 40 என்பது ரூ. 50-ஆக உயர்த்தப் படுகிறது. Sub-Inspector மற்றும் Inspector-களுக்கு 1997-ல் ரூ. 30 என்பது ரூ. 45 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 45 என்பது ரூ. 55-ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் 10,904 இரண்டாம் நிலைக் காவலர்கள், 72,650 முதல் நிலை மற்றும் தலைமைக் காவலர்கள், 8,542 உதவி ஆய்வாளர்கள் பயன் பெறுவார்கள். சுமார் ரூ. 1 கோடி கூடுதலாகச் செலவாகும்.
-
20
Risk allowance - இடர்ப் படி. காவல் துறையினர் ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளில் பணிபுரிகின்றார்கள். அதனால் அவர்களுக்கு மாதந்தோறும் இடர்ப் படி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 1997-ல் இடர்ப் படி ரூபாய் என்று இருந்தது. 1998-ல் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த இடர்ப் படி 60 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. துணைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 1997-ல் 30 ரூபாய் என்று இருந்தது. 1998-ல் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது தற்போது 70 ரூபாயாக உயர்த்தப் படுகிறது. இதனால் அரசுக்கு சுமாராக ஒரு கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். 90 ஆயிரம் காவலர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
காவலர்களுக்கு தற்போது ஆண்டு ஒன்றுக்கு இரண்டு set சீருடைகள் வழங்கப்படுகின்றன. சீருடை தைக்க set ஒன்றுக்கு 75 ரூபாய் வீதம் தையற்கூலி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனை set ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் இரண்டு set-ற்கு 200 ரூபாய் இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பற்றி இங்கே பல உறுப்பினர்களும் எடுத்துக் கூறினார்கள். உதவி ஆய்வாளர்களுக் கான அந்தஸ்து இவர்களுக்குத் தரப்பட்டிருந்தாலும், உதவி ஆய்வாளர்களுக்கான ஊதியம் தரப்படவில்லை என்று தெரிவித்தார்கள். இந்த குறை களையப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் உதவி ஆய்வாளர்களைப் போலவே ஊதிய