பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




624

காவல்துறை பற்றி

நாதஸ்வரத்தையும் அழைத்துக் கொண்டார். எப்பொழுதுமே இரட்டை நாதஸ்வரம் எடுப்பாக இருக்கும் என்பதற்காக, செல்வத்தையும் அழைத்துக்கொண்டார். அவரும் சேர்ந்து, நாதஸ்வரம் வாசித்து, களைகட்டியது. எவ்வளவு களை, கடந்த காலத்திலே இருந்தது காவல் துறையிலே என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது.

நம்முடைய அம்மையார் யசோதா அவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தன்னுடைய கருத்துக்களை இங்கே எடுத்து வைத்து, தன்னுடைய தொகுதிக்கு என்னென்ன தேவை என்பவற்றையெல்லாம் கோரிக்கைகளாக இங்கே வைத்திருக் கின்றார்கள்.

நம்முடைய நண்பர், ம.தி.மு.க. சார்பில் பேசிய நண்பர், தமிழகத்திலேயிருந்து நம்மையெல்லாம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, வெளிநாட்டுக் காட்சிகளையெல்லாம் காட்டி, தமிழகத்திற்குக் கடைசி கட்டத்திலே வந்து, நேரம் இல்லாத காரணத்தால் அதை முடித்துக்கொண்டார்; பரவாயில்லை. அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்குத் தெரியும், எனக்குப் புரியும் என்ற காரணத்தால், நான் அவரை எங்கேயாவது சந்திக்கின்ற நேரத்தில் உண்மையைச் சொல்ல நிச்சயமாகத் தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட சந்தர்ப்பம் எனக்கு வாய்க்குமோ வாய்க்காதோ என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்ன நடந்தது, எத்தகைய சூழ்நிலையிலே இப்படிப்பட்ட ஒரு கற்பனை கட்டிவிடப்பட்டது என்பவையெல்லாம் காவல் துறைக்கும் தெரியும்; எனக்கும் மிக நன்றாகத் தெரியும்.

இந்த விவாதத்திற்கு இடையே நம்முடைய செல்வம் அவர்கள், அவர் பட்ட வேதனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல, தனக்கு ஒரு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். வழிகாட்டுவதற்கு நீதிமன்றம் இருக்கின்றது. சட்டம் இருக்கின்றது. அந்தச் சட்டத்தைச் செயல்படுத்த, நீதியை உண்மையான நீதியை வரவழைக்க, எத்தகைய உதவியையும் செய்ய இந்த அரசு, செல்வம் போன்றவர்களுக்காகத் தயாராக இருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).