626
காவல்துறை பற்றி
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், காவலர்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இப்பொழுது இருக்கின்ற நிலை, உயர்ந்த நிலைதான், நான் இல்லை என்று மறுக்கவில்லை. கடந்தகால ஆட்சியிலே, முதலமைச்சராக இருந்த அம்மையார் அவர்கள், கூடுமானவரையிலே தொழிலாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு நன்மைகளைச் செய்தாலும், செய்யாவிட்டாலும், அதற்கு மாறாகத் துன்பங்களை விளைவித்திருந்தாலும்கூட, அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற் குரிய ஒரு படை, காவல் துறை படைதான் என்ற காரணத்தால், அந்தக் காவலர் படையைக் கைக்குள்ளேயே வைத்து இருந்தார். அதற்கு ஏற்ப, காவலர் படைக்குத் தேவையான நன்மைகளை எல்லாம் நிறைய செய்தார். (மேசையைத் தட்டும் ஒலி). அதனால் தான், இன்றைக்குக் காவல் துறை, அம்மையார் அவர்களைப் புகழ்ந்தும், போற்றியும், இன்றளவும் அவர் சொல்கிற கட்டளைகளை நிறைவேற்றியும், எதிர்க்கட்சிகளை எப்படி யெல்லாம் வேட்டையாட வேண்டுமோ, அப்படியெல்லாம் வேட்டையாடியும், யார் யார்மீது என்னென்ன வழக்குகளைப் போட வேண்டுமோ, அந்த வழக்குகளையெல்லாம் போட்டும், ஒரு பெரிய நிலைக்கு அந்தத் துறை வந்து இருக்கிறது. அந்தத் துறை வசதியாக, வாய்ப்பாக இன்றைக்கு இருக்கிறது. ஆனால், ஒன்றை மறந்துவிடக் கூடாது.
நானும், பேராசிரியரும், இந்த அவைக்கு வந்து 50 ஆண்டு காலம் ஆகிறது. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்று, இந்த அவையிலே நுழைந்த நான், இடையிலே ஓரிரு மாதங்கள் இலங்கைப் பிரச்சினைக்காக இராஜினாமா செய்துவிட்டு வெளியிலே இருந்தேனே அல்லாமல், பாக்கி நேரமெல்லாம், இந்த அவையிலே இருந்திருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). எனவே, எனக்கு இந்த அவையிலே 50 ஆண்டுக் கால அனுபவம் உண்டு. அதை வைத்துச் சொல்லுகின்றேன்; கடந்தகால ஆட்சியிலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே காவலர்களுக்கு நீங்கள் ஆயிரம் கோடிதான் ஒதுக்கினீர்கள். இப்பொழுது நாங்கள் 5 ஆயிரம் கோடி ஒதுக்கி யிருக்கிறோம் என்றெல்லாம் சொல்லும்பொழுது எனக்கே ஒரு கவலை. இப்பொழுதுதான் இந்த மண்டபத்தைப் புதுப்பித்தோம்,