கலைஞரின் சட்டமன்ற உரைகள்
627
மேஜை, நாற்காலிகளை எல்லாம் போட்டோம், இந்த அடி அடிக்கின்றார்களே மறுபடியும் பழுதுபார்க்க வேண்டுமே என்கின்ற அளவிற்கு, கவலை ஏற்படக்கூடிய அளவிற்கு மேசையைத் தட்டுகிறீர்கள், மகிழ்ச்சியடைகிறேன்.
நான்கூட இங்கே என்னுடைய நண்பர்களைப் பார்த்துச் சொல்வேன். 'நீங்கள் எல்லாம் சரியாகச் சாப்பிடுவது இல்லையா? அவர்கள் எப்படி சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள், பாருங்கள்'. (சிரிப்பு). அப்படி என்று சொல்வது உண்டு. அந்த அளவிற்கு அடி அடிக்கிறீர்கள்; அப்படி மகிழ்ச்சியடைகின்றீர்கள். ஆனால், இந்த மகிழ்ச்சியடைவதற்கு, காவல் துறை இவ்வளவு களிப்போடு இருப்பதற்கு, ஏற்கெனவே இந்த ஆட்சி காரணம் என்று நீங்கள் சொன்னாலும்கூட, இதனுடைய ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உங்களுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். 1957ஆம் ஆண்டுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, காவலர்களுடைய நிலை என்ன? நான் அன்றைக்கு இருந்த எந்த ஆட்சியையும் குறை கூறுவதற்காக இதைச் தைச் சொல்லவில்லை. அன்றைக்குப் பெருந்தலைவர் காமராஜருடைய தலைமையிலே ஆட்சி இருந்தது. பக்தவத்சலத்தினுடைய பார்வையிலே ஆட்சி இருந்தது, நிர்வாகம் இருந்தது. சி. சுப்பிரமணியம் அவர்களுடைய நிர்வாகப் பொறுப்பிலே ஆட்சி இருந்தது. இதே அவையில் எங்கள் காதுகளிலே ஒலித்தது, சி. சுப்பிரமணியம் அவர்கள் கையிலே budget புத்தகத்தை எடுத்துக்கொண்டு படித்தார். படிப்பதற்கு முன் சொன்னார்; இன்றைக்கு நான் சதம் அடிக்கப் போகிறேன், century அடிக்கப்போகிறேன் என்றார். என்ன பொருள் தெரியுமா? 100 கோடி ரூபாய் budget. அவ்வளவு பெருமையாக அன்றைக்குக் சொன்னார். 100 கோடி ரூபாய் budget, அதைப் படிக்கப் போகிறேன் என்று சொன்னார். 1957, 1958, 1960 இந்த ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த budget தான் இன்றைக்கு 20,000 கோடி ரூபாய், 30,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. எனவே, முன்பு 3,000 கோடிதான் ஒதுக்கினீர்கள், இப்பொழுது 5,000 கோடி ஒதுக்கி யிருக்கிறீர்கள் என்று சொல்வதில் எல்லாம் பொருள் இல்லை. அவ்வப்பொழுது வருமான உயர்வு, வரி உயர்வு,