பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




628

காவல்துறை பற்றி

வரிகளால் ஏற்படுகின்ற வருமானம், இப்படிப் பல வகையிலே கிடைக்கின்ற வருமானங்கள், ஒரு ஆட்சியிலே பொருளாதாரம் அவ்வப்போது பெருகிப் பெருகி, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், கோடி என்கின்ற அளவுக்குப் பெருகும். இல்லாவிட்டால் 100 கோடி ரூபாய் budget இன்றைக்கு 30,000 கோடி ரூபாய் budget-ஆக உருவாகி யிருக்கிறது என்றால் என்ன காரணம்? எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த 100 கோடி ரூபாய் budget இருந்த காலத்தில் ஒரு காவலருடைய சம்பளம் என்ன? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? நானே ஒரு நாடகத்தில் ஒரு பாட்டு எழுதி, அப்பொழுது சிக்கிக் கொண்டேன். 'உதய சூரியன்' என்கின்ற நாடகம்; அரசியல் நாடகம். பக்தவத்சலம் அவர்கள், அந்த நாடகத்தைத் தடை செய்து, "ஏன் தடை செய்தேன் தெரியுமா? என்று இந்த அவையிலே விளக்கமும் கொடுத்தார். 'போலீஸ் காரர்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடக் கூடாது; அப்படித் தூண்டிவிடுகின்ற பாட்டு இதிலே இருக்கிறது; ஆகவேதான் தடை செய்தேன்' என்று இங்கே சொன்னார். நான் அவருக்கு நேராகவே, 'நீங்கள் தடை செய்த பாட்டைப் பாடிக் காட்டுகிறேன், பாருங்கள்”! என்று இங்கே அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினேன். உங்களுக்கும் பாடிக்காட்டுகிறேன். பாடியல்ல, படித்துக் காட்டுகிறேன். பாடினால், பசி நேரம் என்று போய்விடுவீர்கள்! (சிரிப்பு).

“ஆராரோ! ஆராரோ! ஆணழகா கண் வளராய்! என்று போலீஸ்காரனுடைய மனைவி தன்னுடைய குழந்தையைப்

போட்டு, தாலாட்டுகிறாள்.

“அஞ்சு பத்து சம்பளத்தில் மிஞ்சுவதில் வளர வந்த அஞ்சுகமே கண் வளராய்!

போலீசு வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு, புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண் வளராய்! துப்பாக்கி எடுத்துகிட்டு போகின்ற ஙொப்பனிடம்! பழம்பாக்கி கேட்டுகிட்டு வழி மறிக்கும் கடன்காரன் வருகின்ற காட்சிதனைக் காணாமல் கண் வளராய்! நாடாளும் மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு