பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




632

காவல்துறை பற்றி

திருடர்கள் ஆகியோரைக் கைது செய்து, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, பொது அமைதியைக் காவலர்கள் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். இந்த நடவடிக்கைகளால், குற்றங்கள் நிகழ்வது மாநிலத்தில் வெகுவாகக் குறைந்து இருக்கிறது என்பதற்கும், சில ஒப்பீடுகளை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

2001-2006 வரையில், ஐந்து வருடத்தில், ஆதாயக் கொலைகள் அ.தி.மு.க. ஆட்சியில், 2001-ல் மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்றே மாதங்களில் 19 கொலைகள்; 2006, இப்போது மே, ஜூன், ஜூலையில் 17 கொலைகள். ஆதாயமற்ற வேறு கொலைகள், அ.தி.மு.க. ஆட்சியில் 2001-ல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த மே, ஜூன், ஜூலை ஆகிய அந்த மூன்று மாதங்களில் 521; தி.மு.க. ஆட்சியில் இந்த மூன்று மாதங்களில் 344. கொள்ளைகள், அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மூன்று மாதங்களில் 49; இப்போது 35. வழிப்பறி, அப்பொழுது 218' இப்பொழுது 112. கன்னக்களவு, இப்போது 863, இந்த மூன்று மாதங்களில். அன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில், அந்த மூன்று மாதங்களில் கைதட்டக்கூடிய அளவிற்கு 1,860. திருட்டுக்கள், தி.மு.க. ஆட்சியிலே 3,384; அ.தி.மு.க. ஆட்சியில் 4,958. வரதட்சணைக் கொடுமைகள், இப்பொழுது 31; அப்பொழுது 59. மகளிருக்கு எதிரானவை 311 குற்றங்கள்; மகளிருக்கு எதிரான குற்றங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் 522. கலவரங்கள், தி.மு.க. ஆட்சியில், இந்த மூன்று மாதங்களில் 476; அ.தி.மு.க. ஆட்சியில் அந்த மூன்று மாதங்களில், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் 885. ஆகவே, இந்த குற்றங்கள் சற்றேற ஒன்றிரண்டு, பத்து, இருவது என்கின்ற அளவிற்கு வித்தியாசங்கள் இருப்பதால், இவற்றை வைத்தே இந்த ஆட்சியையும், அந்த ஆட்சியிலே இருக்கின்ற காவல் துறையினுடைய கடமைகளையும், அவர்களுடைய பணிகளையும் அளவிட்டுவிட முடியாது.

அந்தந்த நேரத்திற்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, சிலபல நடக்கின்றன. அவற்றை வைத்தே, இதனால்தான் இது உயர்ந்த ஆட்சி, இது தாழ்ந்த ஆட்சி என்று கணக்கிட நான் தயாராக இல்லை. நான் அதைப்பற்றிக் கிண்டல் செய்யவும், கேலி செய்யவும் தயாராக இல்லை.