கலைஞரின் சட்டமன்ற உரைகள்
637
ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை வளர்ந்து கொண்டே வரும்போது, ஒரு ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்குச் செலவழிப்பதைவிட, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு அதிகமாகத்தான் இருக்கும். அப்படி அது அதிகமாக ஆகியிருக்கலாம். ஆனால், உதாரணமாக 1991-1996-இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1,716 கோடி ரூபாய்தான் காவல் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதற்கு அடுத்து வந்த ஐந்தாண்டுக் கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், காவல் துறைக்காகச் செலவழிக்கப் பட்ட தொகை, 3,988 கோடி ரூபாய். அதற்குப் பிறகு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் 8,000 கோடி ரூபாய், காவல் துறைக்காக ஒதுக்கப்பட்டது என்று சேகர்பாபு கூறியது, எந்த ஆதாரத்தின் அடிப்படையிலே என்று எனக்குத் தெரியவில்லை. நிதித் துறையிலே நான் விசாரித்தவரையில், கடந்த ஐந்தாண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில், 8,000 கோடி ரூபாய் காவல் துறைக்காக ஒதுக்கப்படவில்லை என்றும், 6,159.20 கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டது என்றும், நிதித் துறை வாயிலாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை, சேகர்பாபு அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். எனவே, நிதியொதுக்கீடு உயருவது, அது அவ்வப்பொழுது இருக்கின்ற நிலைமைகளைப் பொறுத்து, வளர்ச்சியைப் பொறுத்து, பொருளாதார நிலையைப் பொறுத்து, இதை ஒரு பெரிய சாதனையாக ஒப்பிட்டுக்காட்டக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.
காவல் துறையின்மீது அம்மையார் அவர்களுக்கு, முன்னாள் முதலமைச்சர் அவர்களுக்குள்ள அன்பை, அருளை, இரக்கத்தை, அவர்களுக்காக அவர் காட்டிய, பொழிந்த கருணையைப் பற்றியெல்லாம் இங்கே எடுத்துக்காட்டப்பட்டது. ஒன்றிரண்டை மாத்திரம், கோப்புகளைச் சான்றாக வைத்துச் சொல்ல விரும்புகின்றேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 12-9-2003 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஈரோடு மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில், காவலராகப் பணியாற்றிய,