பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

63

அதைப்போல, டிஸ்டிரிக்ட் போலீஸ் மெயின்டனன்ஸ் ஆஃப் வெஹிகில்ஸ் என்ற தலைப்பில் 1967-68-ல் 33 இலட்ச டிரிக்ட் போலீஸ் மெயின்டனன்ஸ் ஆஃப் வெஹிகில்ஸ் என்ற தலைப்பில் 1967-68-ல் 33 இலட்ச ரூபாயும், 1968-69-ல் 29 இலட்ச ரூபாயும், 1969-70-ல் 29 இலட்ச ரூபாயும்உள்ளது. ஏறத்தாழ 4, 5 இலட்சம் குறைக்கப்பட்டிருக் கிறது. 1967-68-ல் 5 இலட்சம் அதிக மானதற்குக் காரணம் பழைய வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக அப்பொழுது அந்தச் செலவு ஆகியிருக்கிறது. 1968-69, 1969-70-ல் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுவிட்ட காரணத்தினால் பழுது பார்க்கும் செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. 'பாசேஸ் ஆஃப் நியூவெஹிகில்ஸ்' என்ற தலைப்பின் கீழ், 1967-68-ல் 11 இலட்சம் ரூபாயும், 1968-69-ல் 20 இலட்சம் ரூபாயும், 1969-70-ல் 32 இலட்சம் ரூபாயும் உள்ளது. எனவே, 1968-69-ல் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன என்ற முறையிலும் பாராமரிப்புக்கான செலவு குறைந்தது நியாயம் தான் என்று நண்பரவர்கள் உணருவார்கள் என்று கருதுகின்றேன்.

குறைந்திருக்கும் இவைகளை மாத்திரம் சுட்டிக்காட்டி னார்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இனங்களை அவர்கள் சொல்லவில்லை. அதுதான் எதிர்க்கட்சிக்குள்ளன இலக்கணம் என்று வகுத்துக் கொண்டிருக்கும் காரணத்தால் அவர்கள் சொல்ல வில்லை என்று கருதுகிறேன்.

இரயில்வே போலீஸ் விஷயமாக 1967-68-ல் 31.21 இலட்சமும், 1968-69-ல் 34 இலட்சம் ரூபாயும், 1969-70-ல் 35.36 இலட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சி.ஐ.டி. விஷயமாக 1967-68-51, 1967-68-ல் 51 இலட்சமும், 1968-69-ல் 59 இலட்சமும், 1969-70-ல் 62.73 இலட்சமும், மானியங்கள் என்னும் விஷயத்தில் 1967-68-ல் 3.73 இலட்சமும், 1968-69-ல் 4.75 இலட்சமும், 1969-70-ல் 4.71 இலட்சமும், ஃபையர் சர்வீஸ்' விஷயத்தில் 1967-68-ல் 61 இலட்சமும், 1968-69-ல் 75 இலட்சமும், 1969-70-ல் 84 இலட்சமும், 'ஸிட்டி போலீஸ்' விஷயமாக 1967-68-ல் 158 இலட்ச ரூபாயும், 1968-69-ல் 195 இலட்ச ரூபாயும், 1969-70-ல் 220 இலட்ச ரூபாயும் என்கின்ற அளவுக்கு அதிகமாகி இருகிறது

மொத்தத்திலே பார்க்கப்போனால் போலீஸ் துறைக்காக செலவழிக்கப்படுகிற பணம் 1967-68-ல் 12 கோடி, 1968-69-ல் 13.73 கோடி, 1969-70-ல் 14 கோடியே 70 லட்சம் ரூபாய் என்கின்ற