பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

639

இதற்குப் பிறகாவது, அந்தத் தொகை வழங்கப்பட்டதா; கோப்பு கையெழுத்திடப்பட்டதா என்றால், இல்லை. 24-1-2006 அன்று, மீண்டும் உள்துறையிலேயிருந்து ஒரு கோப்பு தயாரிக்கப் பட்டு, ஒரு இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்திற்கு வழங்க ஒப்புதல் கோரி, முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

இறுதியாக, அந்தக் கோப்பில் நிதித் துறை செயலாளர், 27-1-2006 அன்று கையெழுத்திட்டு, முதலமைச்சர் அலுவலகத்திற்குக் கோப்பு அனுப்பப்பட்டபோதிலும், கடைசிவரை அந்தக் கோப்பில் அப்பொழுது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் கையெழுத்திட்டுத் திரும்ப அனுப்பவேயில்லை.

தேர்தல் முடிந்தபிறகு அந்தக் கோப்பு, மீண்டும் ஒப்புதல் பெறாமல், துறைக்குத் திரும்ப அனுப்பப்பட்டது. தற்போது அந்தக் கோப்பு எனக்கு அனுப்பப்பட்டு, 11-6-2006 அன்று கையெழுத்திட்டு, அனுப்பியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). காவலர்களுக்குக் காட்டப்பட்ட கருணையின் அத்தியாயத்திலே இது ஒரு அத்தியாயம்.

ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு நாளும் ஏடுகளில் வரும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதாவது மறைந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கினார் என்பதற்கான புகைப்படம் அது. தற்போது என்னிடம் ஒரு கோப்பு வந்தது. என்ன கோப்பு தெரியுமா? அவர் முதலமைச்சராக இருந்தபொழுது, 153 காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களுடைய குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்கான அனுமதி வழங்குகின்ற கோப்புதான் அது. நான் கேட்டேன்; அந்தக் காவல் துறை நண்பர்களுக்குத்தான் நிதியே வழங்கப்பட்டுவிட்டதே, எதற்காக இப்போது கோப்பு என்று கேட்டேன்.

அதற்கு அதிகாரிகள், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் கோப்பில் கையெழுத்திடாமல், ஆணை பிறப்பிக்காத நிலையிலேயே,