பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




640

காவல்துறை பற்றி

2004-2005ஆம் ஆண்டுகளில் அத்தனை காலம் காவல் துறை நண்பர்களுக்கு நிதியை வழங்கியிருக்கிறார்கள். அதற்கான கோப்புகள்தான் 153 பேருக்கு நிதியுதவி வழங்குவதற்கான கோப்புகள், என்னிடம் பின்னேற்பு கையெழுத்து கேட்டு வந்துள்ளது. பின்னேற்பு, after issue.

153 கோப்புகளுக்கு பின்னேற்பு கையெழுத்து கேட்டு என்னிடத்திலே வந்தது. இவ்வாறு ஆணையே இல்லாமல், ஒருவருக்கு அல்ல; இருவருக்கு அல்ல; 153 பேருக்கு ஆணையே இல்லாமல், நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஒரு சோகச் சம்பவம் இருக்கமுடியுமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). முதலமைச்சருடைய கையெழுத்தே இல்லாமல் நிதியுதவி வழங்கிய அற்புதம், கடந்த ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சியில் நடைபெற முடியும்?

.

வீரப்பனைப்பற்றி சாங்கோபாங்கமாகப் பேசி முடித்து விட்டீர்கள். நான் அதற்குமேலே எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால், அதபற்றி சில வழக்குகள் என் மீதும், நம்முடைய 'நக்கீரன்' கோபால்மீதும், வேறு சிலர்மீதும் போடுவதற்காக, சில file-கள் தயாரிக்கப்பட்டு, அதிலே முதலமைச்சர் கையெழுத்திட்டு, அந்த வழக்குகளை உடனடியாகத் தொடர வேண்டுமென்று, அதுபற்றி விசாரணையெல்லாம் நடைபெற்று, யாரோ ஒருவர், ஒரு போலீஸ் அதிகாரி, கர்நாடகத்திலிருந்து வெளியிட்ட ஒரு புத்தகத்திலே உள்ள ஆதாரங்களையெல்லாம் வைத்து, எனக்குப் பணம் கொடுத்தார்கள், வீரப்பனைக் காப்பாற்றுவதற்காக என்றெல்லாம் சொல்லி, அது அப்பொழுதே, அந்த ஆட்சியிலேயே, அங்குள்ள ஒற்றர்களிடத்திலே அனுப்பப்பட்டு, அவர்கள் நன்கு ஆராய்ந்து, கடைசியாக இதில் எந்த ஆதாரமும் கிடையாது, எந்த சாட்சியமும் கிடையாது, யாரும் இதை ஒத்துக் கொள்ளவில்லை என்று அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்ட கதையையும், நான் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இங்கே சொல்ல விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்முடைய எதிர்க்கட்சித் துணைத்