பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

649

இவர்களெல்லாம் கையெழுத்திட்டு, “அந்த அழகான கட்டடத்தை, உலகத்திலே வேறு எங்கும் இப்படிக் கடற்கரை ஓரத்திலே இல்லாத, எழில்மிகுந்த ஒரு கட்டடத்தை இடிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும்; அதைப் பழுதுபார்த்து அப்படியே வைத்திருங்கள்” என்று கடிதம் எழுதினார்கள்.

-

அதற்குப்பிறகு, அதைப் பற்றி விசாரித்தால், அதை ஒருவர் ஏலத்தில் எடுத்து, இடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அழைத்து, கெஞ்சிப் பேசி, அவர் அதைக் கேட்காமல் நீதிமன்றத்திற்குச் சென்று, நாங்கள் நீதிமன்றத்திலே சென்று வாதாடி, அந்த வழக்கை வாபஸ் பெறச்செய்து, அந்த இடத்தை இப்போது காப்பாற்றி வைத்திருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). அது தான் இன்றைக்கு சென்னை மாநகரத்தினுடைய தாஜ்மஹாலாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிற அந்த D. G. P. யினுடைய Office என்பதை உங்களுக்கெல்லாம் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). அவ்வளவு அழகான கட்டடத்தை மீட்டு, இன்று நீங்களும், இங்கே சுற்றுலா வருகின்ற பயணிகளும் இரசிக்கத்தக்க அளவுக்கு மாற்றிய அந்தப் பெருமை, அதற்கு ஒத்துழைத்த பெருமை மை காவல்துறை நண்பர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு; இந்த விண்ணப்பம் எழுதியவர் களுக்கும் உண்டு என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல, Commissioner Office 10 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்படவுள்ளது.

வண்டலூர் அருகில் உள்ள ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கழகக் கட்டடத்திற்கான முதல் கட்டப் பணி ஜூன் மாதம் முடிவுறும், அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குழல் வாசிக்கும் காவலர்கள், 55 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாக இருக்கிறார்கள்; அவர்கள், 1993-1994ஆம் ஆண்டில் முறையான இரண்டாம் நிலைக் காவலர்களாக மாற்றப்பட்டு, 10 ஆண்டுக் காலம் பணி முடித்த நிலையில், 31-12-2004 முதல் முதல்நிலைக் காவலர்களாகப் பதவித் தரம்