பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

651

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்தைச் சீர்படுத்தி, விதிகளைச் செயல்படுத்துவதில் சிறப்பான கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும், பின்வரும் இடங்களில் ஒவ்வொன்றிலும் தலா ஓர் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 4 தலைமைக் காவலர்கள், 4 முதுநிலைக் காவலர்கள், 12 இளநிலைக் காவலர்கள் மற்றும் ஓர் இரண்டாம் நிலை வாகன ஓட்டுநர் காவலர்களைக் காவலர்களைக் கொண்ட 20 போக்குவரத்துக் காவல் நிலையங்களை 8.27 கோடி ரூபாய் செலவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

அந்தப் போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைக்கப் படும் இடங்கள்: கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருப்பெரும்புதூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, பெருமாநல்லூர், சமயபுரம், திருமங்கலம், சமயநல்லூர், புதுச்சத்திரம், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர், காங்கேயம், பவானி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், வள்ளியூர், சாத்தூர், பெரம்பலூர். (மேசையைத் தட்டும் ஒலி).

தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நெல்லை ஆகிய பத்து மாவட்டத் தலைநகரங் களிலும் சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் நடமாடும் நீதி மன்றங்களைப் போல, ஒரு கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

கோவை மாவட்டத்தில், கே. ஜி. சாவடி புறக்காவல் நிலையம், திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம், மணிகண்டம் புறக்காவல் நிலையங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் மூங்கில் துறைப்பட்டு புறக்காவல் நிலையம், கடலூர் மாவட்டத்தில் நடுவீரன்பட்டு புறக்காவல் நிலையம், வேலூர் மாவட்டத்தில் மேல்பட்டி புறக்காவல் நிலையம், மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி புறக்காவல் நிலையம், தேனி மாவட்டத்தில் ஹைவேவிஸ் புறக்காவல் நிலையம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டியோடு புறக்காவல் நிலையம், திருச்சி இரயில்வே மண்டலத்தில் திருப்பூர் புறக்காவல் நிலையம் ஆகியவற்றைக்