652
காவல்துறை பற்றி
காவல் நிலையங்களாக 2.96 கோடி ரூபாய்ச் செலவில் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
சென்னை நகரத்தில் எம். எம். காலனியில் உள்ள எம். 2 காவல் நிலையத்தை, 4 ஆம் தரத்திலிருந்து 2 ஆம் தரக் காவல் நிலையமாகவும், மாங்காட்டில் உள்ள டி. 14 காவல் நிலையத்தை 4 ஆம் தரத்திலிருந்து இரண்டாம் தரக் காவல் நிலையமாகவும். (மேசையைத் தட்டும் ஒலி). குன்றத்தூரில் உள்ள டி. 13 காவல் நிலையத்தை 5 ஆம் தரத்திலிருந்து இரண்டாம் தரக் காவல் நிலையமாகவும், முத்தா புதுப்பேட்டையில் உள்ள டி. 8 காவல் நிலையத்தை 4 ஆம் தரத்திலிருந்து இரண்டாம் தரக் காவல் நிலையமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள 4 ஆம் தரக் காவல் நிலையத்தை இரண்டாம் தரக் காவல் நிலையமாகவும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள 4 ஆம் தரக் காவல் நிலையத்தை மூன்றாம் தரக் காவல் நிலையமாகவும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள 4 ஆம் தரக் காவல் நிலையத்தை மூன்றாம் தரக் காவல் நிலையமாகவும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள 5 ஆம் தரக் காவல் நிலையத்தை மூன்றாம் தரக் காவல் நிலையமாகவும், திருப்பரங் குன்றத்தில் உள்ள 4 ஆம் தரக் காவல் நிலையத்தை மூன்றாம் தரக் காவல் நிலையமாகவும், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள 5 ஆம் தரக் காவல் நிலையத்தை 4 ஆம் தரக் காவல் நிலையமாகவும், வேலூர் மாவட்டம் ஞானசேகரன் அவர்களுடைய வேண்டுகோளையேற்று சத்துவாச்சேரியில் உள்ள 4 ஆம் தரக் காவல் நிலையத்தை 2 ஆம் தரக் காவல் நிலையமாகவும் 4.18 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). சிவபுண்ணியம் சில காவல் நிலையங்கள் கேட்டிருக்கின்றார். அவையும் வழங்கப்படும் என்பதைக் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ்நாடு காவல் துறையில் மொத்தம். . . (மணியடிக்கப்பெற்றது).
—
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 98,897 காவல் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போது 42,016 குடியிருப்புகள் உள்ளன. இதன்மூலம்