பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




654

காவல்துறை பற்றி

தமிழ்நாடு காவல்துறை சார்புப் பணி சிறப்பு விதியின்படி, சரகப் பதவி உயர்வுக்கான வாரியம், எழுத்துத் தேர்வையும், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்பயிற்சித் தேர்வுகள் உள்ளிட்ட நேரடித் தேர்வுகளையும் நடத்தி, அதில் தேர்ச்சி பெற்ற தலைமைக் காவலர்களை, உதவி வி ஆய்வாளர்களாக உள்ளூர் மற்றும் ஆயுதப் படை பதவி உயர்வு அளிக்க தேர்ந்தெடுக்கும் முறை தற்போது உள்ளது.

காவல் துறையிலே உதவி ஆய்வாளர் பணிக்குக் கீழே உள்ள பதவிகளுக்கோ, உதவி ஆய்வாளர் பணிக்கு மேலுள்ள பதவிகளுக்கோ, இத்தகைய பதவி உயர்வுக்கான தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. எனவே, தலைமைக் காவலர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான தேர்வுகளைத் தற்போது எழுதி வருகின்றார்கள். இத்தகைய போக்கு, தலைமைக் காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பணிமூப்பு மற்றும் பணிப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு, இதரப் பதவிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதைப்போல, இவர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தலைமைக் காவலர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த அரசு இதை ஏற்று, இனி தலைமைக் காவலர் பதவியிலிருந்து உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வுக்கு நடைபெறும் தேர்வு முறையை இரத்து செய்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

பத்தாயிரம் இரண்டாம் நிலைக் காவலர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே முதற்கட்டமாக இந்த ஆண்டு 5,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். (மேசையைத் தட்டும் ஒலி).

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர் குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பொருளாதாரப் 140 பயன்கள் கிடைக்கும்வகையில், அவர்களுக்கு ஏற்கெனவே கழக ஆட்சியிலே நடைமுறையில் இருந்ததுபோல், தமிழ்நாடு சிறப்புக் காவலர் பெண்கள் பனியன் தயாரிப்போர் தொழில் கூட்டுறவுச்