656
காவல்துறை பற்றி
முதல் தகவல் அறிக்கைக்கான படிவங்களை அச்சேற்று வதிலும், விநியோகிப்பதிலும் சரியான நெறிமுறைகள் கையாளப் படாத காரணத்தால், பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான படிவங்களை, அரசு அச்சகங்களில் மட்டுமே அச்சேற்ற வேண்டுமென்றும், (மேசையைத் தட்டும் ஒலி). தனியார் அச்சகங்களில் அச்சேற்றும் நடைமுறையை, அறவே ஒழிக்க வேண்டுமென்றும், அரசு அச்சகங்களில் படிவங்களை அச்சேற்றும்போதுகூட, பரிசுச் சீட்டுக்களை அச்சேற்றியபோது மேற்கொள்ளப்பட பாதுகாப்பு முறைகள் அனைத்தையும் கையாண்டு அச்சேற்றப்பட வேண்டுமென்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வது பற்றி ஒரு முக்கியமான அறிவிப்பு. சம்பவம் எந்தக் காவல் நிலைய எல்லையிலே நடைபெற்றது என்பதைக் கணக்கிலே எடுத்துக்கொள்ளாமல் - இப்போது, இங்கிருந்து போய் - மயிலாப்பூர் போலீஸ் ஸ்டெஷனிலே போய் புகார் கொடுத்தால், அதை வாங்கிப் பார்த்துவிட்டு, "இது மயிலாப்பூர் அல்ல; திருவல்லிக்கேணிக்குப் போ" என்று சொல்வார்கள். அது இல்லாமல் - வழக்குப் பதிவு செய்யத்தக்க குற்றம் நிகழ்ந்துள்ளதாக, பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படும் போது, நிலைய அதிகாரி, முதல் தகவல் அறிக்கையை அங்கேயே பதிவுசெய்து, தக்க, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி). அந்தச் சம்பவம் தங்கள் எல்லையில் நடைபெறவில்லை என்ற காரணத்தைக்கூறி, புகார் மனுவினை ஏற்க மறுக்கக்கூடாது. பிற காவல் நிலைய எல்லைக்குள் குற்றம் நிகழ்ந்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அந்த முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய அவசியமில்லாத புகார்கள் அளிக்கப்படும்போது, அவை விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தால் தீர்வு காணப்பட வேண்டும்.