பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

657

தேர்தல் அறிக்கையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது போலீஸ் கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் அவர்களையும் (மேசையைத் தட்டும் ஒலி). போலீஸ் கமிஷன் துணைத் தலைவராக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி. சுதர்சனம் அவர்களையும், (மேசையைத் தட்டும் ஒலி). உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி. ஜி. பி. திரு. பி. காளிமுத்து அவர்களையும் (மேசையைத் தட்டும் ஒலி). மற்றும் ஓய்வுபெற்ற சிறைத்துறை டி. ஐ. ஜி. திரு. ஜி. இராமச்சந்திரன் அவர்களையும், உறுப்பினர் செயலாளராக திரு. இராமானுஜம், ஐ. பி. எஸ். அவர்களையும் நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

1

(மேசையைத் தட்டும் ஒலி).

இன்னொரு முக்கிய அறிவிப்பு. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவைக்கேற்ப போக்குவரத்துப் பிரச்சினைகளைக் கையாளவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல, சமீபத்திய உயர் தொழில்நுட்பச் சாதனங்களை, Latest Hi-tech Gadgets கொண்ட நடமாடும் கண்காணிப்புப் பிரிவுகளைக் காவல்துறையில் ஏற்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. அதையொட்டி, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் நல்லெண்ண அடிப்படையில் as a measure of goodwill சென்னைப் பெருநகரக் காவல்துறையின் பயன்பாட்டுக்கென குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 Accent ரகக் கார்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இது ஒரு முன்னோடித் திட்டமாக, சென்னை மாநகரில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே முன்மாதிரியாக செயல்படுத்தவிருக்கும் இத்திட்டம் வெற்றி அடைந்த பிறகு, தமிழகத்தின் மற்ற மாநகரப் பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

ஆயத்தீர்வை பற்றி நம்முடைய அருமை நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு என்னுடைய துணைத் தலைவர் அவர்கள், சில விளக்கங்களைத்

22 - க.ச.உ. (கா.த)