பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




658

காவல்துறை பற்றி

தந்தார். அந்த விளக்கங்கள் திருப்திகரமானதா இல்லையா என்பதை விரைவில் தெரிந்துகொள்கின்ற அளவிற்கு சில ஆய்வுகள் இந்த அரசின் சார்பில் நடத்தப்படும் என்ற உறுதியை, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களுக்குத் தெரிவித்து, அந்தப் பணி தொடரும் என்பதையும் கூறி, எங்கே தவறு நடந்தாலும், அந்தத் தவறுகளை - அந்த வீரப்பன் விவகாரத்தில் காவல்துறை அதிகாரி காளிமுத்துக்கு கடந்த ஆட்சியில் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல வீட்டுமனை, பணமுடிப்பு வழங்கவில்லை என்று செய்திகள் எனக்கு அனுப்பப்படுகிறது. நேற்றே சொல்லிவிட்டேன். நான் வந்து வழங்கவேண்டும் என்று விட்டுவிட்டார்கள் போல் தெரிகிறது; அது வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

நேற்று, நம்முடைய விஜயகாந்த் பேசும்போது, அறிஞர் அண்ணா அவர்களைக் குறிப்பிட்டு அண்ணா அவர்கள் சொந்தக் கட்சிக்காரனையே, சில அலுவல்களிலே இருந்தவர்கள் தவறு செய்தபோது நடவடிக்கை எடுத்தார் என்று குறிப்பிட்டார்கள். நானும் அண்ணாவின் தம்பிதான். சொந்தக் கட்சிக்காரர்கள் அல்ல; சென்னை மாநகராட்சி மன்றத்தின் மேயரையே கைது செய்தவன் நான். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி). Muster roll என்று ஒரு வழக்கு வந்தது. அந்த Muster roll வழக்கில், எல்லாக் கட்சியினரும் இருந்தார்கள். அனைத்துக் கட்சியினரும் இருந்தார்கள். அப்போது, இதே அவையில் எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள், அந்த Muster roll ஊழலைப்பற்றிப் பேசினார்கள். பேசியவுடனேயே எழுந்து, “நடவடிக்கை எடுக்கப்படும்; இப்போதே அறிவிக்கிறேன்; மாநகராட்சி மன்றம் கலைக்கப்படுகிறது; அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மேயர் இருந்தாலும்கூட கலைக்கப்படுகிறது" என்று அறிவித்து, மறுநாளே மேயர் கைது செய்யப்பட்டதும், மாநகராட்சி மன்றத்தினுடைய உறுப்பினர்கள், முக்கியமான உறுப்பினர்கள், யார், யார் சென்னையிலே மாநகராட்சி மன்றம் உருவாவதற்குப் பாடுபட்டார்களோ, பணியாற்றினார்களோ அவர்களையெல்லாம் தயவுதாட்சண்யம் இல்லாமல், அவர்களை யெல்லாம் கைது செய்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. (மேசையைத் தட்டும் ஒலி).