பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

திரு. பி. ஜி. கருத்திருமன் : கம்பர் கண்ட இராமராஜ்யத்தில்

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கம்பர் கண்ட இராமராஜ்யத்தில் கள்வர் இல்லையென்றார். சீதையையே தூக்கிப் போகிற கள்வன் இருந்தான் (சிரிப்பு).

திரு. பி. ஜி. கருத்திருமன் : அங்கு ஒரு எதிர்க்கட்சி உங்களைப்போல் இருந்து தூக்கிப் போயிருப்பார்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 'கள்வர் இல்லா மையால் ஒரு காவலும் இல்லை' என்று குறிப்பிட்டார். ஏதோ இந்த இரண்டாண்டு காலத்திலேதான், தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக அரசை நாங்கள் அமைத்த பிறகுதான் கள்வர்கள் அதிகப்பட்டு விட்டதைப்போலவும், அதற்கு முன்பு 20 ஆண்டு காலமாக இந்தப் புனிதர்கள் ஆ ஆண்டபோது, கள்வர்களே இல்லாததைப் போலவும், திருட்டுக்களே நடை பெறாததைப் போலவும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள். நான் 20 ஆண்டுக்காலம் பின்னோக்கிச் செல்ல விரும்பவில்லை. 1962- லேயிருந்து மட்டும் புள்ளிவிவரத்தைத் தருகிறேன், அவர்கள் புரிந்து கொள்வார்கள். 'கள்வர் இல்லாமையால் ஒரு காவலும் இல்லை' என்ற கருத்திருமனுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சி எவ்வாறு நடைபெற்றது திருட்டுகள் 20,252; 1963-ல் 19,622; 1964-ல் 20,880; 1965-ல் 20,007; 1996-ல் 22,612; 1967-ல் 22,923 என்கின்ற அளவிலே 22,000, 20,000 என்கின்ற அளவுக்கு 1962-லே இருந்து திருட்டுகள் அப்போதே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டுகள், வழக்கு மன்றத்திற்கு சென்று அதனாலே பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக, கள்வர் இல்லாமலே, வேறு எந்தக்குற்றங்களும் இல்லாமேலே அவர்களுடைய கம்பர் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி நடைபெற வில்லை என்பதை எடுத்துக்காட்டத்தான் இதைச் சொன்னேன்.

கொலைகளைப் பொறுத்தவரையிலே, 1962-ம் ஆண்டிலே 700, 1963-ம் ஆண்டிலே 681, 1964-ம் ஆண்டிலே 799, 1965-ம் ஆண்டிலே 723, 1966-ம் ஆண்டிலே 758, 1967-ம் ஆண்டிலே 740, 1968-ம் ஆண்டிலே 765 என்கின்ற அளவுக்கு நடந்திருக் கின்றன. தற்கொலைகளைப் பொறுத்தவரையிலே 1962-லே 1803, 1964-லே 1,651, 1965-லே 1,698, 1966-லே 1,799, 1997-லே 1,791