கலைஞரின் சட்டமன்ற உரைகள்
659
-
அதேபோல தஞ்சையிலே ஒருவர், என்னுடைய ஆருயிர் நண்பர், உயிர் நண்பர், ஒரு வழக்கறிஞர். அவர் வங்கியில் செய்த தவறுக்காக, அவர் கைது செய்யப்பட்டு - வக்கீல் அவர் அவருடைய 'சன்னத்' எல்லாம் பிடுங்கப்படுகிற அளவுக்கு தண்டிக்கப்பட்டார் என்பதையும் நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே, யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டம் பாய்வதற்கு அஞ்சாது, தயங்காது, நீதி நிலைநாட்டப்படும் என்பதை இந்த மாமன்றத்திலே இந்த மானியக் கோரிக்கையிலே என்னுடைய முடிவுரையாக எடுத்துக்கூறி, உங்களுடைய அன்பான கருத்துகளுக்கெல்லாம் என்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து, நன்றி தெரிவித்ததை ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாக வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
திரு. தி. வேல்முருகன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்; ஆயிரத்துச் சொச்சம்பேர். அதிலே 98 காவலர்களுக்கு, சட்டம்-ஒழுங்கைப் பார்க்கின்ற தாலுகா காவல் நிலையத்தில் பணியுறுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் முதல்வர் அவர்கள், அந்த 98 உதவி ஆய்வாளர் களையும், தாலுகா காவல் நிலையத்தில் பணி அமர்த்துவதற்கு ஆவன செய்வார்களா என்பதோடு, மாண்புமிகு தமிழகத் தினுடைய முதல்வர் தலைவர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையின்மீதும், நிதிநிலை அறிக்கையின்மீதும் தொடர்ந்து ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
சிறைச்சாலைகளில் கடந்த 15, 20 ஆண்டுக்காலமாக விடுதலை பெறாமல் இருந்து வருகிறார்கள். கடந்த மாதம்கூட பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலத்தில் 309 நபர்களை விடுதலை செய்திருக்கிறார்கள். நம்முடைய முத்தமிழ் அறிஞர் முதல்வர் அவர்கள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் வருகின்ற காரணத்தினால், அந்த அப்பாவிகளை, சிறைச்சாலையில்