பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




666

காவல்துறை பற்றி

பெண்களை மானபங்கப்படுத்துதல் அ.தி.மு.க. ஆட்சியில்

1050 - கழக ஆட்சியில் 666.

நம்பிக்கை மோசடி அ.தி.மு.க. ஆட்சியில் 115 ஆட்சியில் 100,

தீ வைப்பு நிகழ்ச்சிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 304 ஆட்சியில் 239,

1026.

கழக

கழக

ஏமாற்றுதல் அ.தி.மு.க. ஆட்சியில் 1554 - கழக ஆட்சியில்

குற்றங்களை கண்டுபிடித்தல் அ.தி.மு.க. ஆட்சியில் 88 சதவிகிதம் - கழக ஆட்சியில் 93 சதவிகிதம் (மேசையைத் தட்டும் ஒலி).

கண்டுபிடிக்கப்பட்ட களவு போன சொத்தின் மதிப்பு

-

அ.தி.மு.க. ஆட்சியில் 24 கோடி கழக ஆட்சியில் 27 கோடி. மீட்கப்பட்ட சொத்து அ.தி.மு.க. ஆட்சியில் 19 கோடி கழக ஆட்சியில் 23 கோடி.

இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சியில் 64,701 கழக ஆட்சியில் 60,535.

-

இதிலே பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. நூறு, இருநூறு தான் வித்தியாசம் அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும். அப்படி இருக்கும்போது நாங்கள் நினைப்பதைப்போல எதிர்க்கட்சியில் இருக்கின்ற நீங்களும் நினைத்தால் இரண்டு பேரும் சேர்ந்து எல்லோரும் சேர்ந்து நாட்டில் நல்லதை வழங்கலாம். நாட்டில் தீமைகளை ஒழிக்கலாம். அதை விட்டுவிட்டு நீதான் தீமையை அதிகமாக செய்தாய். நாங்கள் செய்ததெல்லாம் நன்மைதான். நாங்கள்தான் அமைதியாக நாட்டை வைத்திருக்கிறோம் என்று இப்படிப் பேசுவது யார் அமைதியை நிலைநாட்டுவது என்பதிலே நமக்குள்ளே வாக்குவாதம் வந்து அதிலே முற்றி அதிலே தகராறாகி அதுவே பெரிய போர்க்களமாக ஆகி நமக்குள்ளே அபிப்பிராய பேதங்கள் மேலும் மேலும் வளர்ந்தது என்று சொன்னால் அதுவே காரணமாக ஆகும். எனவே இதிலே போட்டா போட்டி வேண்டாம் என்று எதிர்க்கட்சி நண்பர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.