பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

667

இன்னொன்று ஜெயக்குமார் சொன்னார். காவல்துறையை நவீனமயமாக்குகின்ற திட்டத்திற்கு இப்போது நிதி குறைக்கப்பட்டு விட்டது என்றார். நேற்றைய தினம் செங்கோட்டையன் அவர்கள் இதையே குறிப்பிட்டார். அவர்கள் இந்த புத்தகத்திலே இருக்கின்ற அந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு அதைச் சொன்னார்கள். அவர்கள் அதை வைத்துக் கொண்டு சொல்வதிலே தவறில்லை. ஆனால் அதை ஆழமாக பார்த்தால் 2002 2003 அ.தி.மு.க. ஆட்சியில் 136.20 கோடி ரூபாய். 2003 - 2004ல் அதே அ.தி.மு.க. ஆட்சியில் 89.14 கோடி ரூபாய்; ஆக இந்த குறைவு அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஏற்பட்டுவிட்டது.

-

அதற்காக நான் அ.தி.மு.க. ஆட்சியை குறை கூறவில்லை. மத்திய சர்க்கார் தந்த உதவியைக் கூட பர்சன்டேஜ் விகிதத்தில் தான் தந்தார்கள். அப்படித் தந்தபோது 50-50 என்று தந்தபோது அதாவது மத்திய அரசு 50 சதவிகிதம் என்றும், மாநில அரசு 50 சதவிகிதம் என்று தந்தபோது அது, நிறைவாக இருந்தது. பிறகு 60-40 என்று தந்தபோது மாநில அரசின் பங்கு குறைந்து, அது குறைந்து ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக இருந்தது. அதனால்தான் அ.தி.மு.க. ஆட்சியிலே மீண்டும் குறைக்கப்பட்டது என்பதற்கான விவரமாகும் ம் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள

விரும்புகின்றேன்.

காவலர்களுடைய காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. எப்போது நிரப்புவீர்கள் என்று நம்முடைய ஜெயக்குமார் அவர்களும் எதிர்க்கட்சி சார்பிலே பேசியவர்களும் தோழமைக் கட்சி சார்பிலே பேசியவர்களும் குறிப்பிட்டார்கள். காலியிடங்களை நிரப்பிட, கடந்த ஆண்டு 5000 பேரைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்பொழுது நடைமுறையிலே அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 5000 பேரை இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற நல்ல செய்தியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

காவலர்களுக்கு Feeding charge குறைந்து வருகிறது. குறைக்கப்பட்டு விட்டது என்று ஜெயக்குமார் மிகவும் வருத்தப் பட்டார். அவருக்கு தெரியும். அரிசி விலை குறைந்திருக்கிற காரணத்தால் அந்த கணக்கில் அது குறைவாக தெரிகிறது. அது