பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காவல்துறை பற்றி

என்கின்ற அளவுக்கு இருந்திருக்கின்றன. எதுவுமே நடைபெற வில்லை, தி.மு.க. ஆட்சியிலேதான் கொலை, களவு, திருட்டு இப்படிப்பட்ட குற்றங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று அவர் கூறிய கூற்றுக்கு மறுப்பாகத்தான் இதைச் கூறுகிறேனே அல்லாமல், வேறு எதற்கும் சொல்லவில்லை. எந்த ஆட்சி நடைபெற்றாலும் காவல் துறை இருப்பதும் அதற்குப் பணம் செலவழிப்பதும், குற்றங்களைத் தடுக்கவும், செய்த குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவும்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

2

மதுவிலக்கைப் பொறுத்தவரையில் இப்பொழுது எத்தனை குற்றங்கள் அதிகமாக இருக்கின்றன என்று எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 1967-லே ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து சொச்சம் இருந்தது, 1968-லே 2 இலட்சத்து 53 ஆயிரத்து சொச்சம் ஆகியிருக்கிறதே என்று கூறிவிட்டு, முன்னுக்குப் பின் முரணாக ஒன்றைச் சொன்னார்கள். இவர்கள் இப்பொழுது மதுவிலக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை, காரணம் அவர்கள் ஏதோ ஒருவகையிலே இந்த ஆட்சியாளர்களுக்குத் தொடர்புடையவர் காளக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எங்களுடைய ஆட்சியில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து சொச்சம் மதுவிலக்குக் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் களுடைய ஆட்சியிலே ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து சொச்சம் மதுவிலக்குக் குற்றங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

திரு. பி. ஜி. கருத்திருமன் : குற்றம் செய்தவர்கள், உங்களுடைய ஆட்சியிலே தாராளமாகச் செய்கிறார்கள், எங்களுடைய.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : எங்களுடைய ஆட்சியிலே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறோம், தொடர் பில்லாத காரணத்தால். உங்களுடைய ஆட்சியிலே அவர்களில் பலர் விடப்பட்டிருக்கிறார்கள், உங்களோடு தொடர்பு கொண்ட காரணத்தால்.

சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகளைப்பற்றி அடிக்கடி, காவல் துறை மானியத்திலே மாத்திரமல்ல, எந்த மானியமாக இருந்தாலும், அது கவர்னருடைய உரைமீது விவாதமாக இருந்தாலும், வரவு-செலவு திட்ட விவாதமாக இருந்தாலும், எப்படி