கலைஞரின் சட்டமன்ற உரைகள்
669
இல்லை. கோபம் இருக்கும், குமுறல் இருக்கும், ஆத்திரப் பேச்சுகள் இருக்கும். ஆனாலும் உள்ளூர வெறுப்பு இருக்காது. ஒருவரையொருவர் பார்த்து சிரித்தாலே இன்றைக்கு பயப்படுகி றார்களே. அப்படிப்பட்ட நிலைமை அன்றைக்கு இல்லை. (மேசையைத் தட்டும் ஒலி). தோழமை உணர்வோடு, நட்பு உணர்வோடு (அப்போதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் சிரிக்கவில்லை). (மேசையைத் தட்டும் ஒலி).
இங்கே நம்முடைய அமைச்சர் எடுத்துக்காட்டியதைப் போல் குளித்தலை மீனாட்சி வழக்கு நீண்ட காலமாக புரியாமலே இருந்து இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகுதான் அந்த வழக்கு என்ன என்று வெளிப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. எதிரிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, ஒரு புதுவித கொள்ளையர்கள் திடீரென்று கேள்விப்பட்டோம். கிரில் கொள்ளையர்கள். அவர்கள் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களையெல்லாம் கொள்ளை யடித்து அதன் காரணமாக எந்தவிதமான தண்டனையும் தரமுடியாத சூழ்நிலையில் போலீஸார் தேடித்தேடி அலைந்து கடந்தகால ஆட்சியிலே அவர்கள் பிடிபடாமல் இந்த ஆட்சியிலே அவர்கள் எல்லாம் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள், இங்கே கொள்ளையடிக்க வந்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டு மூன்று பெண்கள் உட்பட 14 குற்றவாளிகளை கொல்கத்தா சென்று கைது செய்து அவர்கள் இன்றைக்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட 66 வழக்குகளில் திருடுப்போன தங்க நகைகள் 184 சவரன் மற்றும் வெள்ளி நகைகள் 400 கிராம் மற்றும் 43 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
—
இன்னொன்று பீரோ புல்லிங் கொள்ளை பீரோக்களை வெளியிலே இருந்தே இழுத்து அதில் இருக்கிற பணத்தை நகை நட்டுகளை திருடுவது. அந்தக் களவுகளில் ஈடுபட்டு தொடர்ந்து காவல்துறைக்கு பெரும் அறைகூவலாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகமணி என்பவன் கைதுசெய்யப்பட்டு அவனிடம் 69 வழக்குகளிலே களவுப்போன தங்க நகைகள் 438 பவுன். வெள்ளி நகைகள் 650 கிராம். மற்றும் ரொக்கம் 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.