பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




670

காவல்துறை பற்றி

அண்மையிலே தலைமைச் செயலகத்திற்கு திருடு போன சொத்துக்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு உரியவர்களுக் கெல்லாம் ஒப்படைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துகொண்டபோது அங்கே வரிசை வரிசையாக கொலு வைப்பது போல அந்த நகைகளையும் பொருட்களையும் வைத்து அதை உரியவர்கள் வந்து வாங்கி கொண்டபோது எவ்வளவு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் என்பதை நான் நேரிலே காண முடிந்தது. (மேசையைத் தட்டும் ஒலி).

ஆக, மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு 89 சதவிகித சொத்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 81 சதவீதம் சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

2005ஆம் ஆண்டு 86 சதவீத சொத்துக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. அதைவிட அதிகமாக நாம் கண்டுபிடித்து அவர்களையெல்லாம் தண்டித்திருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). இதிலே நான் போட்டிப்போட விரும்பவில்லை. அன்றைக்கு இருந்த செயல்முறையில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி. அவர்கள் 4 பர்லாங் முன்னேறினார்கள் என்றால் நாம் 6 பர்லாங் முன்னேறியிருக்கிறோம் என்ற அந்த உணர்வோடுதான் இங்கே பேசுகிறேனே அல்லாமல் நீங்கள் ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை. நாங்கள்தான் செய்தோம் என்று இந்த போலீஸ் துறை மானியம் பேசுகின்ற நேரத்தில் தீயணைப்பு துறைக்கு வேலை கொடுக்க நான் விரும்பவில்லை.

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. போலீஸ் துறையையும் தீயணைப்புத் துறையையும் ஒன்றாக வைத்திருப்பதற்கு காரணம் இதிலே ஏற்படுகின்ற சூடு இதிலே மூளுகின்ற அனல் இதிலே பற்றி எரிகின்ற தீ இவைகளை அணைப்பது:றகு தீயணைப்புப் படை உதவி செய்யும் என்பதற்காகத்தான் இரண்டு மானியங்களையும் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி). நல்லவேளை இங்கே தீயணைப்பு துறை உள்ளே வராமலே அணைந்துப் போயிருக்கிறது நெருப்பு. அணைந்து போகவில்லை. வெளியில் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், அணைந்துபோனது அணைந்ததுதான். அந்த நிம்மதியுடன் என் பேச்சைத் தொடருகின்றேன்.