பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

671

ஜி. கே. மணி அவர்களும் மற்றும் சுதர்சனம் அவர்களும் செங்கோட்டையன் அவர்களும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் களும், வேல் முருகனும் கள்ளச் சாராயத்தைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். அவைகளை எல்லாம் ஒடுக்கவேண்டும் என்று சிவபுண்ணியம் சொன்னார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வம் சொன்னார். நான் அவர்களுக்கு எல்லாம் சொல்வது கள்ளச் சாராயம் என்பது முடிக்க முடியாத ஒன்று என்பதுதான். என்ன இப்படி சவால் விடுகிறீர்கள் என்று கேட்பீர்களேயானால் சொல்கிறீர்களே காமராஜர் ஆட்சி வரவேண்டும் - காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று, அந்த காமராஜர் ஆட்சியிலேயே ஒழிக்க முடியாத ஒன்று இது - பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலே அது எந்த அளவுக்கு இருந்தது, பக்தவச்சலம் ஆட்சியிலே எந்த அளவுக்கு இருந்தது என்பதை புள்ளி விபரம் போட்டு - எனவே இதை ஒழிக்க முடியாது, இத்தனை இலட்சம் பேர் கள்ளச் சாராயப் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டு சிறையிலே இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. அது மாத்திரம் அல்ல இதே அவையிலே நான் பேசியிருக்கின்றேன். அன்றைக்கு முதலமைச்சர் நிலையிலே இருந்து பேசியிருக்கின்றேன். என்ன பேசினேன் என்றால் போர்ப்பந்தரில் மகாத்மா காந்தி பிறந்த ஊரில் அவருடைய வீட்டிற்கு பக்கத்திலேயே பெட்ரோல் பங்க் போல ஒரு பெரிய கிணறு தோண்டி அதிலே கள்ளச்சாராயத்தை காய்ச்சி அதை விற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அல்ல, இந்திய பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள் டில்லி பாராளுமன்றத்திலே சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டேன். ஆனால் இந்திரா காந்தி வருத்தப்பட்டாலும் சரி, இன்றைக்கு அந்த கட்சியிலே இருக்கின்ற கடைசி தொண்டன் வருத்தப்பட்டாலும் சரி, அறவே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாததற்கு காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுகிறோம் என்றால் அவர்களைவிட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய முடியும் என்பதிலேதான் வெற்றி பெற முடியுமே தவிர வேறு வழியிலே வெற்றிபெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, உலக பண்பாடு, உலகக் கலாச்சாரம் சாட்சியாக இருக்கின்றது.

டாஸ்மார்க்

நான் இன்றைக்கும் சொல்லுகின்றேன் ஊழியர்களைப் பற்றி எல்லாம் பேசினீர்கள் - நான்கூட நம்முடைய