672
காவல்துறை பற்றி
கோவிந்தசாமியிடத்திலேயோ சிவபுண்ணியத்திடத்திலேயோ வேடிக்கையாக கேட்கலாம் என்று எனக்கு ஒரு ஆசை. டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டு, ஜி.கே. மணியினுடைய அன்புக் கட்டனையை ஏற்று மதுவிலக்கு திட்டத்தைக் கொண்டு வந்து விடலாமா? என்பதுதான் அந்த யோசனை. இவர்கள் எல்லாம் சரி என்று சொன்னால் அதற்குக் கூட தயாராக இருக்கின்றேன். 7000 கோடி ரூபாய் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று. ஆனால் அந்த டாஸ்மார்க் ஊழியர்கள் அப்போது என்ன ஆவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். (சிரிப்பு).
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவில்லை என்ற மிகக் கடுமையாக செங்கோட்டையன் அவர்கள் இந்த அரசின் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டிவிட்டு அதற்கு மேல் போகாமல் அதோடு விட்டு விட்டார். நான் அவருக்கு ஒரு புள்ளி விபரத்தை சொல்ல விரும்புகின்றேன்.
-
-
-
2001ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப் பட்டோர் 3 சம்பவங்களில் இறந்தவர்கள் 98 பேர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 250 பேர். 2003ஆம் ஆண்டு ஒரு சம்பவம் இறந்தவர்கள் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 89 பேர். 2004ல் இரண்டு சம்பவம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் 5 பேர். மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டவர்கள் 5 பேர். 2005ல் இரண்டு சம்பவங்கள் இறந்தவர்கள் 10 பேர் - மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்கள் 37 பேர். ஆக 2006 ஏப்ரல் முடிய அ.தி.மு.க. ஆட்சியில் உங்களுக்கெல்லாம் புரியும்படி சொல்ல வேண்டுமே யானால், நீங்கள் அன்போடு சொல்லுகின்ற “அம்மா ஆட்சியில்” 134 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 387 பேர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2006 மே மாதத்தில் தி.மு.க. ஆட்சி வந்தது முதல் டிசம்பர் வரையிலே ஒரே ஒரு ஆள்தான் இறந்திருக்கிறார். இந்த கள்ளச்சாராயத்தை குடித்து என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நான் கள்ளச்சாராயத்தை ஆதரிக்கிறேன். அதற்கு நான் வக்காளத்து வாங்குகிறேன் என்று யாரும் கருதக் கூடாது. கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு நாமும், காவல்துறை நண்பர்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பதிலே
அது