பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




680

காவல்துறை பற்றி

புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்போது வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதாலும், ரோந்துப் பணி அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்பதாலும் ஒரகடத்தில் வகை 1 காவல் நிலையம் புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இதோடு சுங்குவார் சத்திரத்தில் தற்போது உள்ள வகை 5 காவல் நிலையம் வகை 1 ஆக தரம் உயர்த்தப்படும்.

அறிவிப்பு 6 - காவல் பணியாளர்களுக்கு 2000 புதிய குடியிருப்புகள்.

தமிழ்நாடு காவல் பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு தற்போது 42,556 குடியிருப்புகள் உள்ளன. மொத்தமுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 43.03 சதவிகிதம் ஆகும். இந்த ஆண்டில் கூடுதலாக காவல் பணியாளர்களுக்கு 2000 குடியிருப்புகள் சுமார் ரூ. 110 கோடி செலவில் கட்டப்படும்.

அறிவிப்பு 7 இரண்டாம் நிலைக் காவலர்களை முதல்நிலைக் காவலர்களாக நிலை உயர்த்துதல்.

பத்து ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் 7320 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 3231 இரண்டாம் நிலைப் பெண் காவலர்களும் முதல் நிலைக் காவலர்களாக நிலை உயர்த்தப்படுவர். இதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6.13 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும்.

-

அறிவிப்பு 8 முதல் நிலைக் காவலர்களைத் தலைமைக் காவலர்களாக நிலை உயர்த்துதல்.

5 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ள 293 முதல் நிலைக் காவலர்கள் தலைமைக் காவலர்களாக நிலை உயர்த்தப் படுவர்.

அறிவிப்பு 9 - தலைமைக் காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக நிலை உயர்த்தப்படுவர்.

114 தலைமைக் காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் களாக நிலை உயர்த்தப்படுவர்.

அறிவிப்பு 10 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பணியாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்குதல்.