பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




682

காவல்துறை பற்றி

2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு காவல்துறை துணைத்தலைவர் பதவியுடன் சேலத்தில் காவல் சரகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு அமைச்சுப் பணியாளர் பதவிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் இவ்வலுவலகத்தின் நிர்வாகப் பணியை கவனிக்க அயற்பணி அடிப்படையில் அமைச்சுப் பணியாளர்கள் சரகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பணியமர்த்தப்படுகின்றனர். இந்த நிலைமையை சரி செய்ய சேலம் காவல் சரகத்தில் அமைச்சுப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

அறிவிப்பு 14 வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் படையில் முன்னாள் முன்னாள் படை வீரர்களை நிரந்தரம் செய்தல்.

காவல்துறையில் சிறப்புப் பிரிவில் மாதாந்திர ஒப்பந்த ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 42 முன்னாள் இராணுவத்தினரை நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிவிப்பு 15

தூத்துக்குடி, திருநெல்வேலி,

நாகர்கோவில் இடையே இலக்க முறை நுண்ணலைத் தொடர்பு வசதி ஏற்படுத்துதல்.

1997ஆம் ஆண்டில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் இடையே இலக்கமுறை நுண்ணலைத் தொடர்பு வசதி உருவாக்கப் பட்டது. 8 ஆண்டுகாலம் உபயோகத்தில் இருந்து வந்த இந்த தெலைத் தொடர்பு இப்போது பழுதடைந்தும், உதிரிபாகங்கள் சந்தையில் கிடைக்காத சூழ்நிலை உள்ளதாலும் பழைய கருவிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரூ. 2.35 கோடி செலவில் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அறிவிப்பு 16 - மன்னார்குடியில் உள்ள மறு அஞ்சல் தொலைத் தொடர்பு நிலையக் கட்டிடம் கட்டுதல். (Repeater Station).

1973ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மன்னார்குடி மறு அஞ்சல் நிலையமானது தற்போது முழுவதும் சேதமடைந்து பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளது. மிக நவீன கருவிகள் இந்தக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருப்பதாலும், பணியாளர்கள்