பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

காவல்துறை பற்றி

முன்னேற்றக் கழக அரசு அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. (பலத்த ஆரவாரம்). ஆனால் நியாயமான காரணங் களுக்காகப் போராடுங்கள், நேர்மையான காரணங்களுக்காகப் போராடுங்கள், அதை விட்டு விட்டு சட்டம் இல்லை, அமைதி இல்லை, ஒழுங்கு இல்லை என்று ஒரு தவறான பிரச்சாரத்தை, ஒரு கற்பனைப் பிரச்சாரத்தை மக்கள் நம்பாத ஒன்றை எடுத்துச் சொல்லி, அதன் காரணமாக நாங்கள் ஒரு புரட்சி ஆரம்பிக்கிறோம் என்று சொன்னால், புரட்சிக்குப் பிறகு என்ன ஆகும்? இந்த அரசு கவிழும். கவிழட்டும். கவிழ்ந்த பிறகு என்ன ஆயிற்று மேற்கு வங்காளத்தில்? (ஆரவாரம்). கவிழ்த்தீர்களே கேரளத்தில், கவிழ்ந்தபிறகு என்ன ஆயிற்று கேரளத்தில்? கவிழ்த்தீர்களே பஞ்சாபில், என்ன ஆயிற்று பஞ்சாபில்? (ஆரவாரம்) கவிழ்ந்தீர்களே, கவிழ்த்துக் கொண்டீர்களே, என்ன ஆயிற்று புதுவை மாநிலத்தில்? நீங்கள் கவிழ்க்கக் கவிழ்க்க நாங்கள் கட்டுமரம்போல், உருண்டு, திரண்டு கலம்போல் வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் ஆட்சி அமைக்கும் என்று துடிப்போடு அல்ல, மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த ஆரவாரம்).

சட்டம், அமைதி கெட்டுவிட்டது என்று கூறுகிறீர்களே? நான் பிற மாநிலங்களை ஒப்புநோக்கிக் காட்டினால், அங்கே நடப்பதையெல்லாம் சொல்லவேண்டுமா, முன்பு நடந்ததை யெல்லாம் சொல்லவேண்டுமா என்று சொல்வீர்கள். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், எந்த அரசாங்கத்திலும், இப்படிப்பட்ட காரியங்களை தவிர்க்க முடியாதவைகாளக ஆகிவிடக்கூடும். அப்படி ஆகிவிடுகிற நேரத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக நம்முடைய மாநிலத்தில் நடைபெற்றுவிடவில்லை என்பதை எண்ணிப் பார்ப்பதற்குத்தான் இந்த புள்ளி விவரங்களை இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.

1968-ல் செப்டம்பர் திங்கள் 19-ம் தேதி டெல்லியில் நடந்தது. மத்திய பொதுப்பணித்துறை அலுவலகங்களும், வேறு சில மத்திய அலுவலகங்களும் உள்ள இந்திரபிரஸ்த பவனுக்குள் போலீசார் நுழைந்து சர்க்கார் ஊழியர்கள் மீது தடியடிப் பிரயோகம்