பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

69

செய்து துரத்தி அடித்தனர். இரு நபர்கள் உயிரிழந்தனர். சுமார் 300 ரு பேர் காயமடைந்தனர். இந்திரபிரஸ்த எஸ்டேட்டில் இந்திரபிஸ்த பவனுக்கும் விகாய பவனுக்கும் இடையேயுள்ள ரஸ்தாவிஸ் ழியர்களை ஜனசங்க எம்.பி. ஒருவர் சமாதானப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் 2 மணி, போலீஸார் முன்னெச்சரிக்கைத் தராமல் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். இடைவேளையின்போது ஊழியர்கள் சிறு கூட்டமாகக்கூடினர். அவர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வெடித்தனர். ஊழியர் கோஷ்டியினர் மேல் மாடியில்கூடி போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும், இதர பொருள்களையும் வீச ஆரம்பித்தனர். இந்திரபிரஸ்த பவனில் பல்வேறு மாடிகளில் சூப்பரின்டெண்டிங் என்ஜினியர் ஒருவர் உட்பட சில சர்க்கார் அதிகாரிகள் போலீசாரால் அடிக்கப்பட்டனர். அதிகாரிகள் வெளியே இழுத்துவரப்பட்டனர். காயமடைத்தவர்களில் அநேகர் உடனடியாக கவனிக்கப் படவில்லை. அநேகப் பெண் ஊழியர்களுக்கும் தடியடி கிடைத்தது. முகம் கழுவும் அறைக்குள் ஒடி ஒளிந்த பெண்கள் வெளியே இழுத்து வரப்பட்டனர் . இது நடந்தது மத்திய அரசு சர்க்கார் ஊழியர்கள் போராட்டம் நடைபெற்ற நேரத்தில்.

திரு.பி.

திரு. பி. ஜி. கருத்திருமன் : என்ன நடவடிக்கை

எடுத்தார்கள் மத்திய சர்க்கார் தெரியுமா?

THIRU K. VINAYAKAM: Police official were suspended and some of them were dismissed also.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதைப் போலவே இந்த சர்க்காரும் செய்கிறது.

திரு. பி. ஜி. கருத்திருமன் : வெளி மாநிலங்களைப் பற்றிக் குறிப்பிடுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபனை கிடையாது. அது மாதிரி இங்கும் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்களா? இங்கே ஓரளவுக்கு நடந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் நடந்த அளவுக்கு இங்கே நடக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக் கிறார்களா? அல்லது நடந்தது தவறு, இனிமேல் அப்படி நடக்காமல் திருத்திகொள்ளவேண்டும் என்று கருதுகிறார்களா?