பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் ஒப்பிட்டுக் காட்டியது டெல்லியில் நடைபெற்றதைவிட, குறைந்த அளவுக்குத்தான் இங்கே நடந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பதற்குத்தான், அப்படிப்பட்ட இந்த மாநிலத்தில் நீங்கள் ஆறு மாதம் கெடு கொடுக்கிறீர்கள். அங்கெல்லாம் எத்தனை மாதம் கெடு கொடுப்பீர்களோ?

திரு. பி. ஜி. கருத்திருமன் : நாங்கள் ஆறு மாதம் கெடு எதற்காகக் கொடுத்தோம்? தவறான பொய் வழக்குகள் பல இடங்களில் போடப்பட்டிருக்கின்றன, அரசியல் நோக்கத்தோடு. அவற்றையெல்லாம் பைசல் செய்து நல்ல முறையில் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அதற்காக நாங்கள் போராடுவோம் என்றுதான் கூறினேன். முதல் அமைச்சர் அவர்கள், அதற்குள்ளே 'இது ஒரு அரசியல் பிரசாரம், ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வருவதற்குத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி யெல்லாம் சொல்ல வேண்டுமென்றால் நான் தைரியமாகச் சொல்வேன். மறைத்துப் பூசிப் பேசவேண்டிய தேவையில்லை. இது மாதிரி சரியாக நடக்கவேண்டும். அதற்கு ஒரு சந்தர்பத்தை நாங்கள் கொடுக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்றுதான் சொன்னேன். அதைத் தவறான முறையில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இதுமாதிரி இதை யெல்லாம் பைசல் செய்தால் தமிழ் நாட்டில் சட்டம், அமைதி பாதுகாக்க உதவியாக இருக்கும் என்றுதான் சொன்னேன் என்று மனதிற்குத் தெரியும். அப்படியில்லையென்றால், எங்கள் ஊழியர் களுக்குக் கஷ்டம் என்றால், நாங்கள் போராட்டம் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்றுதான் சொன்னேன். அப்படி நிலைமை ஏற்படாமல் இருக்கும், அதற்கு வேண்டியதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று வார்த்தைகளையும் நான் சொன்னேன். அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நாங்கள் : செய்கின்ற நல்ல காரியங்களை 'அல்ல' என்று கூறி, 'நாங்கள் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிப்போம்' என்று சொன்னால், அப்பொழுது அந்த நேரத்தில் நாங்கள் அதற்குப் பதில் சொன்னால், இது கற்பனை என்று அப்படியே விட்டுவிடுவார்களா?