பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

71

திரு. பி.ஜி. கருத்திருமன் : போராட்டம் என்றால், பொது மக்கள் ஆதரவு வேண்டும். போராட்டம் என்றால் விளையாட்டு இல்லை, மக்கள் ஆதரவு இருக்கவேண்டும். மக்கள் உணர்வு இருக்கவேண்டும். .

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இப்பொழுதா வது அதைப் புரிந்து கொண்டீர்களே? புரிந்துகொண்டதற்கு நன்றி. மேற்கு வங்கத்தில் 10 மாதங்களில் 315 துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக 115 பேர் இறந்துள்ளார்கள் (குறுக்கீடு). அவசரப்படாதீர்கள், அதற்காகத்தான் நான் இப்படிச் சொன்னேன். குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நான் உங்களைப் புரிந்துகொண்டுதான் அப்படிச் சொன்னேன். நீங்கள் உடனே கூட்டணி என்று கூச்சலிடுவீர்கள், மறுபடியும் உங்களை மடக்கலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.

பீகாரில் 54 துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்துள்ளன. அதில் 41 பேர் இறந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் 52 தடவை துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது. இதில் 47 பேர் இறந்துள்ளனர். பஞ்சாபில் 8 முறை துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சட்டம், அமைதி கெட்டுவிடுகிறது என்கின்ற காரணத்தை அடிக்கடி சொல்லி இங்கிருக்கிற தி.மு.க. அரசின் மீது மாசுமரு வினை ஏற்படுத்தலாம், அல்லது ஒரு போராட்டத்தைத் தொடங்கலாம் என்கின்ற எண்ணம் எவ்வளவு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் நான் இவைகளையெல்லாம் எடுத்துச் சொன்னேன் அல்லாமல், ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். நான்பதிலுக்கு இதை எடுத்துக்கொண்டு ஆணவத்தோடு சொல்கிறேன் என்பது அல்ல. அவர்கள் இப்படி ஒரு போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் ஆதரவு கிடைக்குமா என்று அவர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அப்படி அவர்கள் ஒரு போராட்டத்தைத் தொடங்கினால் தி.மு.க. சர்க்கார் என்ன, காவல்துறை என்ன சும்மா இருக்கமா? ஏன், அவரே சொல்லியிருக்கிறார். தி.மு.க. சர்க்கார் போலீஸை முடக்கிப்போடக் கூடாது, உத்தரவிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.