பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

79

இதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். மதுவிலக்குக் கொள்கையை அமல் நடத்துவதால் மாநிலத்திற்கு 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறதே, நாம் ஒரு 20 கோடி ரூபாய் கொடுத்து உதவலாம் என்ற அளவுக்காவது நல்லெண்ணம் இருந்தால் எவ்வளவோ வரவேற்கலாம். மதுவிலக்குக் கொள்கையை உற்சாகமாகக் கடைப் பிடிக்கலாம். மத்திய அரசு நல்ல முறையில் சிந்தித்து இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை இந்த மாமன்றத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, போலீசார்கள் எந்த அளவுக்குத் தங்கள் கடமைகளை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேசிய நண்பர்களும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களும், எதிர்க்கட்சித் தலைவர் களும் கூடப் பாராட்டிப் பேசினார்கள். போலீசார்கள், உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றபோதும், குடந்தை மகாமகத்தின் போதும், இறுதியாக பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்ததை யொட்டி, 30 இலட்சம், 40 இலட்சம் அளவுக்கு மேற்பட்ட மக்கள் சென்னை நகரில் கூடிய நேரத்தின் போதும் எந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாகத் தங்களுடைய கடமைகளை ஆற்றினார்கள் என்பதும், பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள். மத்திய உள்துறை அமைச்சர் திரு. சவான் அவர்களே இந்தப் போலீஸ் துறையைப் பாராடடினார்கள் என்பதும், ஆளுநர் அவர்களின் பாராட்டும் இந்தத் துறைக்குக் கிடைத்திருக்கிறது என்பதும், இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் அவர்கள் கலந்து கொண்ட அஞ்சலிக் கூட்டத்தில் போலீசார்கள் எந்த அளவிற்குப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்து திருமதி இந்திரா காந்தி அம்மையார் அளித்த பாராட்டுதல்களும் போலீஸ் துறைக்குக் கிடைத்திருக்கின்றன என்பதை இந்த மன்றத்திலே உள்ள அனைவரோடு சேர்ந்து நானும் பாராட்டக் கடமைப் பட்டிருக் கிறேன்.

அடுத்து, துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்துவதைப்பற்றிப் பேசப்பட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தைப் பொறுத்தவரையில் ஏழெட்டு நிகழ்ச்சிகள் குடிகாரர்களைப் பிடிக்கப் போனபோதும், கள்வர்களைக் கைது செய்யப்போனபோதும் நெருக்கடி நிலைமையின் காரணமாக ஏற்பட்டவை. இரண்டொன்றுதான்