80
காவல்துறை பற்றி
விவசாயிகளின் கிளர்ச்சியின்போது ஏற்பட்ட தொல்லைகளினால் உண்டாணவை. நான் இதைப்பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. துப்பாக்கிப் பிரயோகத்தைப் பொறுத்தவரையில் 'ஷூட் டு கில் என்ற கொள்கைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. சுடுவதற்கு முன் கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரேயோகம் முதலியவைகளை யெல்லாம் பயன்படுத்திய பிறகுதான் இது கையாளப்படுகிறது. துப்பாக்கிப் பிரயோகத்தை, கலவரத்தை அடக்க முடியவில்லை யென்றால், எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட பின்னர்தான் கடைசிக் கட்டமாக நடத்தப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசைப் பொறுத்த வரையில் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். 'ஷூட் டு கில்' கொல்வதற்குச் சுடு' என்பதை மாற்றி, 'திறமையற்றவனாக ஆக்குவதற்குச் சுடு' என்பதையும் கடைசி முயற்சியாகத்தான் கொள்ளவேண்டும். அப்படிச் அப்படிச் சுடும்போது உயிரிழப்பு ஏற்படுமானால் போலீஸ் அதற்குப் பொறுப்பு அல்ல. இப்படிப்பட்ட நேரத்தில் சிலர் உயிர் இழந்தால் அதற்குப் போலீஸ் பொறுப்பாளி அல்ல.
அடுத்து, இன்னும் போலீஸ் துறையில் இருக்கிற காவலர்கள் அநேக கஷ்டநஷ்டங்களுக்காளாகிறார்கள். விபத்து களுக்காளாகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் என்று கூறிக்கொள்வதோடு அவர்களுடைய கோரிக்கைகளை தன் நிதி நிலைக்கேற்றவாறு படிப்படியாக நிறைவேற்றித் தருவதும் அரசின் கடமையாகும். என்பதைக் கூறிக்கொள்கிறேன். போலீஸின் க்ஷேமநல நிதிக்காக ஆண்டுதோறும் அரசு ஈட்டு மானியமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தது. அதிகாரிகள் நன்கொடை மூலமாக 50 ஆயிரம் ரூபாய் சேர்க்கிறார்கள். அரசு கொடுக்கும் ஈட்டுமானியம் போதவில்லையென்று கூறியதன் காரணமாக, அரசு கொடுக்கும் ஈட்டுமானயத் தொகை 50 ஆயிரத்தை ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தித் தருவது என்று அரசு முடிவு எடுத்திருப்பதை எல்லா அங்கத்தினர்களும் வரவேற்பார்கள் என்று கூறிக்கொள்கிறேன்.
அடுத்தபடியாக, போலீஸார்களின் இல்லங்களில் பத்து யூனிட்டுகள் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் இரவு எட்டு மணிக்கே விளக்கை