பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

காவல்துறை பற்றி

அடுத்து, போலீஸ்காரர்களுக்கு இந்த ஆண்டு வீட்டு வசதிக்காக 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய சர்க்காரிடம் கேட்டிருக்கும் கடன் தொகை வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, 15 இலட்சம் ரூபாய் செலவில் போலீஸ் காரர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்பதைக்கூறி, நல்ல பல கருத்துக்களைக் கூறியதற்காக எல்லா நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு, இந்த மானியத்தின்மீது தரப்ட்டிருக்கிற வெட்டுப் பிரேரணைகளை யெல்லாம் உறுப்பினர்கள் திரும்பிப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்ற வேண்டுகோளை விடுத்து, என் உரையை முடித்துக் கொள்கிறேன்.